சுடச்சுட

    

    ஆந்திரத்தில் சாலை விபத்து: காஞ்சிபுரத்தைச் சேர்ந்த 4 பேர் சாவு

    By dn  |   Published on : 03rd March 2014 01:12 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஆந்திரம மாநிலம், நகரியில் நடந்த சாலை விபத்தில் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த 4 பேர் இறந்தனர்.

    காஞ்சிபுரம் பி.எஸ்.கே. தெருவைச் சேர்ந்தவர் ரவி (எ) கந்தசாமி (52), அவரது மனைவி லட்சுமிபாய் (48), கண்ணன் ஷா (48) அவரது மனைவி பத்மாவதிஷா (42), ரமேஷ் ஷா (55) அவரது மனைவி ரத்தினாபாய் (50) இவர்களது மகள் ஹேமா (21) ஆகியோர் வெள்ளிக்கிழமை இரவு கார் மூலம் திருப்பதி சென்றனர்.

    சனிக்கிழமை திருப்பதியில் தரிசனத்தை முடித்துவிட்டு இரவு காஞ்சிபுரம் திரும்பினர். ஆந்திர மாநிலம் நகரிக்கு ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3.30 மணிக்கு வந்து கொண்டிருந்தனர். அப்போது நகரியில் ஒரு பாலத்தில் வந்து கொண்டிருந்தபோது, நிலைத்தடுமாறிய கார் தடுப்புச் சுவரில் பலமாக மோதியது.

    இதில் ரவி (எ) கந்தசாமி, கண்ணன் ஷா, ரத்தினாபாய் ஆகியோர் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.

    இவர்களது உடல்கள் நகரி அரசு பொது மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளன. பலத்த காயமடைந்த மற்றவர்களை மீட்ட நகரி போலீஸார் சிகிச்சைக்காக திருத்தணி கொண்டு வந்தனர்.

    திருத்தணியில் சிகிச்சை பலனின்றி ரமேஷ் ஷா இறந்தார். அவரது உடல் திருத்தணி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. பலத்த காயமடைந்த லட்சுமிபாய், பத்மாவதி ஷா, ஹேமா ஆகியோர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

    மேலும் இது விபத்து குறித்து நகரி போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai