சுடச்சுட

  
  thaniyarasu

  இலங்கைத் தமிழர் பிரச்னைக்குத் தீர்வு காண வேண்டுமானால் நாட்டின் பிரதமராக ஜெயலலிதா பதவியேற்றால் தான் முடியும் என்று, பல்லடத்தில் கொங்கு இளைஞர் பேரவையின் மாநிலத் தலைவர் உ.தனியரசு எம்எல்ஏ ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.

  திருப்பூர் மாவட்டம், பொங்கலூர், சுல்தான்பேட்டை ஒன்றியப் பகுதிகளில் கொங்கு இளைஞர் பேரவை சார்பில் கொடியேற்று விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. ஒன்றிய செயலாளர் சி.சு.மணி தலைமை வகித்தார்.

  வாவிபாளையத்தில் கொடியேற்றி வைத்த கொங்கு இளைஞர் பேரவையின் மாநில நிறுவனத் தலைவர் உ.தனியரசு, செய்தியாளர்களிடம் கூறியதாவது:

  முதல்வர் ஜெயலலிதா வரும் மக்களவைத் தேர்தலில் தமிழகத்தின் 40 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணியை வெற்றிபெறச் செய்வார். இதுவரை தீர்க்கப்படாமல் நீண்ட நாட்களாக இருந்துவரும் இலங்கைத் தமிழர் பிரச்னை, சீன எல்லைப் பிரச்னை, இந்திய பொருளாதார வீழ்ச்சி ஆகியவற்றுக்கு ஜெயலலிதா பிரதமராகப் பொறுப்பேற்றால் மட்டுமே தான் தீர்வு காண முடியும்.

  இந்தியாவிலேயே தமிழகத்தில் மட்டும்தான் விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணத் தொகை வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் நிலவிவந்த மின்சாரப் பிரச்னைக்கு பெருமளளவில் தீர்வு காணப்பட்டு விட்டது.

  ஈழத்தமிழர் பிரச்னை, தமிழக மீனவர்கள் மீது இலங்கை ராணுவத்தினர் தாக்குதல் உள்ளிட்ட அனைத்திலும் தமிழர்களைப் புறக்கணிக்கும் காங்கிரஸ் கட்சி வரும் மக்களவைத் தேர்தலில் ஒரு தொகுதியில்கூட வெற்றி பெற முடியாது. தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி போட்டியிடும் தொகுதிகளில் டெபாசிட் தொகைகூடக் கிடைக்காது என்றார். ÷திருப்பூர் திருப்பூர் மாநகரச் செயலாளர் துரை.தண்டபாணி, மாவட்ட அமைப்பாளர் சசிகுமார், சாமிநாதன் உள்பட பலர் உடன் இருந்தனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai