சுடச்சுட

    

    "கச்சத்தீவை மீட்க உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர வேண்டும்'

    By dn  |   Published on : 03rd March 2014 01:36 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கச்சத்தீவை மீட்க உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர வேண்டும் என்று தமிழ்நாடு- புதுச்சேரி வழக்குரைஞர்கள் சங்கத் தலைவர் செல்வம் கூறினார்.

    திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு இக்பாலியா உயர்நிலைப் பள்ளியின் ஆண்டு விழாவுக்கு வந்த தமிழ்நாடு- புதுச்சேரி வழக்குரைஞர்கள் சங்கத் தலைவர் செல்வம் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

    உச்ச நீதிமன்றக் கிளை தமிழகத்தில் துவங்கப்பட வேண்டும். இந்த கோரிக்கையை தமிழக முதல்வர் மூலமாக வலியுறுத்தியுள்ளோம். இந்த கோரிக்கையை பரிசீலனை செய்து உச்ச நீதிமன்ற கிளை தமிழகத்தில் உருவாக்க நடவடிக்கை எடுப்பதாகக் கூறியுள்ளார். தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்படுவதைத் தடுக்கவும் அதற்கு முற்றுப்புள்ளி வைக்கவும் கச்சத் தீவை மீட்க வேண்டும்.

    இதற்காக பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியும் முடிவு எடுக்கப்படவில்லை. ஆகையால், உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர வேண்டும். அதுதான் சட்ட ரீதியான முடிவாக இருக்கும். லோக் அதாலத் பயனுள்ள வகையில் இருந்தாலும், வழக்குரைஞர்களின் தொழில் பாதிக்காத வண்ணம் விதிமுறைகள் பின்பற்றப்பட வேண்டும். இதற்கான விதிமுறைகளை உருவாக்க வேண்டும்.

    அகில இந்திய பார் கவுன்சில் நடத்தும் வழக்குரைஞர்கள் தகுதித் தேர்வை மாநில பார் கவுன்சில்களுடன் கலந்து ஆலோசனை செய்து, விதிமுறைகளைப் பின்பற்றி இந்த தகுதி தேர்வை நடத்த வேண்டும் எனத் தெரிவித்தார். பேட்டியின்போது, சென்னை உயர் நீதிமன்ற வழக்குரைஞர் அப்துல் ரகுமான் உடனிருந்தார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai