சுடச்சுட

    
    ashokkumar

    கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள கே.அசோக்குமார், மாவட்ட ஊராட்சித் தலைவர் பதவியை ஞாயிற்றுக்கிழமை ராஜிநாமா செய்தார்.

    கிருஷ்ணகிரி மாவட்ட ஊராட்சித் தலைவர் கே.அசோக்குமார் கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.

    இதையடுத்து, அவர் சென்னையில் முதல்வர் ஜெயலலிதாவை இரண்டு நாள்களுக்கு முன்பு சந்தித்தார். தொடர்ந்து, அவர் மாவட்ட ஊராட்சித் தலைவர் பதவியை ராஜிநாமா செய்தார்.

    அவர் தனது ராஜிநாமா கடிதத்தை கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் டி.பி.ராஜேஷிடம் ஞாயிற்றுக்கிழமை அளித்தார். மேலும், அவர் பயன்படுத்திய அரசு வாகனத்தையும் மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைத்தார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai