சுடச்சுட

  

  திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் கொத்தடிமை புகார்கள் அதிகரிப்பு

  By dn  |   Published on : 03rd March 2014 01:33 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  bricks

  திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் கொத்தடிமை புகார்கள் அதிகரித்து வருகின்றன என தேசிய மனித உரிமை ஆணைய இணை பதிவாளர் அனில்குமார் பராச்சர் குறிப்பிட்டார்.

  சென்னை தியாகராயர் கலையரங்கில் சனிக்கிழமை நடைபெற்ற கொத்தடிமையிலிருந்து விடுவிக்கப்பட்ட மக்களுக்கான மாநில விழிப்புணர்வுக் கருத்தரங்கில், அவர் மேலும் பேசியது:

  கொத்தடிமை புகார்கள் குறித்து தேசிய மனித உரிமை ஆணையம் உச்ச நீதிமன்றத்தின் கவனத்திற்கு எடுத்துச்சென்று அவர்களை மீட்க நடவடிக்கை எடுத்து வருகிறது. தமிழகத்திலும் கொத்தடிமை புகார்கள் அதிகரித்து வருகின்றன. ஆரம்பத்தில் முறைசாரா தொழில்கள் நடைபெறும் இடங்களில்தான் கொத்தடிமைகள் குறித்த புகார்கள் இருந்துவந்தன. ஆனால் தற்போது, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் பின்னலாடை தொழில் போன்ற முறைசார்ந்த தொழில்கள் நடைபெறும் இடங்களிலும் புகார்கள் அதிகரித்து வருகின்றன. இவற்றை தடுக்கும் வகையில், கொத்தடிமைகள் மறுவாழ்வுக்கான மாநில அரசுகளின் செயல்பாடுகள் குறித்த கருத்துக்கேட்புக் கூட்டம் புதுதில்லியில் வரும் மார்ச் 25 ஆம் தேதி நடைபெறவுள்ளது என்றார் அனில்குமார் பராச்சர்.

  நிகழ்ச்சியில் தேசிய மனித உரிமை ஆணையத்தின் சிறப்பு பிரதிநிதி டாக்டர் எல்.டி.மிஸ்ரா பேசுகையில், நில உடைமையாளர்கள் மற்றும் வட்டிக் கடைக்காரர்களின் சுயநலம் சார்ந்த செயல்களால் ஏழைகள் தொடர்ந்து துன்புறுத்தப்பட்டு வருகின்றனர். மேலும் பணபலம் உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் கொண்டுள்ள இடைத்தரகர்கள் அதிகாரிகள் சிலரின் அதிகாரங்களை தங்களின் சுயலாபங்களுக்கு பயன்படுத்தி வருகின்றனர். வறுமை மற்றும் அறியாமையால் ஏழைகள் நீதிமன்றத்துக்கு சென்று, சட்டரீதியான சமூக நீதியைக்கூட பெறமுடிவதில்லை என்றார்.

  மாநாட்டின் நோக்கம் குறித்து தேசிய ஆதிவாசி தோழமைக் கழக செயல் இயக்குநர் டாக்டர் கே. கிருஷ்ணன், இண்டர் நேஷனல் ஜஸ்டிஸ் மிஷன் இயக்குனர் ஆன்டி கிரிப்த்ஸ், மாநில ஊரக வாழ்வாதர இயக்க கூடுதல் இயக்குநர் டாக்டர் எம். மனோஹராசிங், இண்டர்நேஷனல் ஜஸ்டிஸ் மிஷன் துணை இயக்குனர் குரல் அமுதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். நிகழ்ச்சிக்கான ஒருங்கிணைப்புகளை தேசிய ஆதிவாசி தோழமை கழகம் மற்றும் இண்டர்நேஷனல் ஜஸ்டிஸ் மிஷன் அமைப்புகள் செய்திருந்தன.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai