சுடச்சுட

  

  நடுவழியில் நின்ற ரயில்: பணியில் தூங்கிய கேட்கீப்பர் இடைநீக்கம்

  By dn  |   Published on : 03rd March 2014 02:29 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  சேலத்தில் இருந்து சென்னைக்கு சனிக்கிழமை இரவு 8.30 மணியளவில், எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்டு சின்னசேலம் அருகே வந்து கொண்டிருந்தது. சுமார் 10.15 மணியளவில் கூகையூர் வந்தபோது, அங்குள்ள ரயில்வே கேட்டில் சிக்னல் கிடைக்காததால், ரயிலை ஓட்டுநர் நிறுத்தினார். இதுகுறித்து சின்னசேலம் ரயில் நிலையத்துக்கு அவர் உடனடியாக தகவல் தெரிவித்துள்ளார். அதன்பேரில் ரயில் நிலைய அதிகாரி ராஜதுரை, ஊழியர் ராமக்கண்ணு இருவரும் விரைந்து சென்று கேட் கீப்பர் அறைக்குச் சென்று பார்த்தனர். அங்கு கேட் கீப்பர் பசுபதி (48) அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தார். அவர் போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே மாற்று கேட் கீப்பரை வரவழைத்து ரயில்வே கேட் மூடப்பட்டது. இதையடுத்து சிக்னல் கிடைக்கவே, ரயில் அங்கிருந்து அரைமணி நேரம் தாமதமாக புறப்பட்டுச் சென்றது. இரவு நேரத்தில் காட்டுப்பகுதியில் ரயில் நின்றுகொண்டிருந்ததால் பயணிகள் தவித்தனர். பணிநேரத்தில் தூங்கிய கேட்கீப்பர் பசுபதி பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai