சுடச்சுட

  
  dance

  சிதம்பரம் நடராஜர் கோயிலில் நடைபெற்று வரும் 33-ஆவது ஆண்டு நாட்டியாஞ்சலி விழாவில், சனிக்கிழமை நடிகை ஷோபனாவின் பரதநாட்டியம் நடைபெற்றது.

  விழாவின் 3-ஆம் நாள் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சிக்கு செ.சி.குப்புசாமி தீட்சிதர் தலைமை வகித்தார். சிதம்பரம் கலைவாணி இசை நாட்டியப் பள்ளி மாணவிகள், மதுரை புவனேஸ்வரி இளங்கோவன், பெங்களூர் சிவப்ரியா நாட்டியப்பள்ளி, பெங்களூர் கே.சி.ரூபேஷ், மும்பை சுபாஷின் விஸ்வேஸ்வரன் ஆகியோரின் பரதநாட்டியம் நடைபெற்றது. மலேசியா சுதாநாயர் தாமோதரன், தன்யாஸ்ரீ ஆகியோரின் ஜூகல்பந்தி நடனம், ரேவதி ராமச்சந்திரன் மற்றும் அவரது மாணவிகளின் பரதம், ஜெர்மனி அம்ரித் ஸ்டெயினின் கதக் நடனம், கோபிகா வர்மா மற்றும் அவரது மாணவிகளின் மோகினி ஆட்டம், லாவண்யாசங்கர் மற்றும் அவரது மாணவியரின் பரதநாட்டியம் நடைபெற்றது.

  விழாவில் திரைப்பட நடிகையும், பிரபல பரதநாட்டியக் கலைஞருமான ஷோபனா மற்றும் அவரது மாணவிகளின் பரதம் அனைவரையும் கவர்ந்தது. பின்னர், சென்னை ஸ்ரீகலாரங்கா நாட்டியப் பள்ளி ஸ்ரீதிகா கஸ்தூரிரங்கன், ரேணுகா சுகவனம், தீபா ராமநாதன், சேலம் வித்யாúக்ஷத்ரா ஆகியோரின் பரதநாட்டிய நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai