சுடச்சுட

  

  நின்றிருந்த சரக்கு வாகனத்தின் மீது லாரி மோதல்: 4 பேர் சாவு: 15 பேர் காயம்

  By dn  |   Published on : 03rd March 2014 03:17 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  demolish

  செங்கல்பட்டை அடுத்த காட்டாங்கொளத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகில் பழுதாகி நின்றிருந்த சரக்கு வாகனத்தின் மீது டிப்பர் லாரி மோதியதில் 4 பேர் உயிரிழந்தனர். மேலும் 15 பேர் காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

  திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அண்ணாமலைச்சேரி பகுதியில் வசிக்கும் 5 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் குழந்தைகளுடன் மொத்தம் 20 பேர் ஒரு சரக்கு வாகனத்தில் மேல்மலையனூரில் உள்ள ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி ஆலயத்துக்கு தீமிதி விழாவுக்காக விரதமிருந்து மாலை அணிந்து செங்கல்பட்டை நோக்கி சென்றுள்ளனர்.

  அப்போது காட்டாங்கொளத்தூர் அருகில் சென்றுக் கொண்டிருக்கும்போது டயர் பஞ்சரானதால் வாகனத்தை ஓரமாக நிறுத்திவிட்டு டயரை மாற்றிக் கொண்டிருந்தனர்.

  ஒருசிலர் கீழே இறங்கியுள்ளனர். மற்றவர்கள் வாகனத்திலேயே அமர்ந்திருந்தனர். அப்போது தாம்பரத்தில் இருந்து செங்கல்பட்டை நோக்கி சென்ற டிப்பர் லாரி, பழுதடைந்த சரக்கு வாகனத்தின் மீது வேகமாக மோதியது.

  இதில் சரக்கு வாகனத்தில் இருந்த பூங்காவனம் (30), கஜேந்திரன் (50), ரஜினி என்பவரின் மகன் லக்கேஷ் (7) ஆகிய 3 பேர் அதே இடத்திலேயே இறந்தனர்.

  மேலும் அங்கிருந்த வீட்டின் மதில் சுவர் மீது டிப்பர் லாரி மோதியதில் அந்த வீட்டின் ஹாலோபிளாக்கினால் எழுப்பப்பட்டிருந்த சுவர் இடிந்து விழுந்ததில் சுவரின் அருகே நின்றிருந்த வேலு (50) இறந்தார். இந்த விபத்தில் 15 பேர் காயமடைந்தனர்.

  தகவலறிந்த மறைமலைநகர் போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று இறந்தவர்கள் 4 பேரையும் பிரேதப் பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

  காயம் அடைந்தவர்கள் விவரம்: கஜேந்திரனின் மனைவி தேசம்மாள் (37), செல்லதுரை (46), தேசப்பனின் மகள் மோனிகா (13), மகன் சக்திவேல் (9) ஆகிய 4 பேர் மறைமலைநகர் பொத்தேரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை மேற்கொண்டுள்ளனர்.

  மேலும் லிங்கநாதனின் மகன் ரஜினி (35), இவரது மனைவி வெண்மதி (30), இவரது மகள் சினேகா (11), தேசிங்கின் மகன் பிரேம்குமார் (4), ரவியின் மகள் பாவன்யா (14), சின்னதுரையின் என்பவரின் மனைவி கோதவள்ளி (30), இவரது மகள் நீலா (13), கோபாலின் மகன் மங்காநாதன் (55), ரகுவின் மனைவி கல்பனா (22), தேசிங்கு (38), பானுமதி (38) ஆகிய 11 பேரும் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை மேற்கொண்டுள்ளனர்.

  மறைமலைநகர் போலீஸார் வழக்கு பதிவு செய்து தப்பியோடிய டிப்பர் லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai