சுடச்சுட

  

  நீர்மூழ்கிக் கப்பல் விபத்து உள்ளிட்ட சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம்: முதல்வர் உத்தரவு

  By dn  |   Published on : 03rd March 2014 12:36 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  jaya_birthday

  நீர்மூழ்கிக் கப்பல் விபத்து உள்பட ஏராளமான விபத்துகளில் உயிரிழந்தவர்களுக்காக தலா ரூ.1 லட்சம் நிவாரணம் வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

  இது தொடர்பாக அவர் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:

  சென்னை துறைமுகத்தில் இருந்த தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்துக்குச் சொந்தமான நீர்மூழ்கிக் கப்பலில் விஷவாயு தாக்கி மகேந்திரன், பவானி சங்கர் ஆகியோர் ஜனவரி 27-ம் தேதி உயிரிழந்தனர்.

  அவர்களின் குடும்பங்களுக்கும், மாரடைப்பால் உயிரிழந்த ராமநாதபுரம் மாவட்டம் தஞ்சாக்கூர் கிராமத்தைச் சேர்ந்த இந்திராணி, விழுப்புரம் மாவட்டம் ஆரூர் ஊராட்சியைச் சேர்ந்த அங்கம்மாள், வலிப்பு காரணமாக உயிரிழந்த பணப்பாக்கம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவன் தேவன் ஆகியோரின் குடும்பங்களுக்கு முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.1 லட்சம் வழங்கப்படுகிறது.

  விபத்துகளில் உயிரிழப்பு:அரசு பஸ் மோதி விபத்துக்குள்ளானதில், தேனி ஓடையப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த திலகவதி, வேலூர் மாவட்டம் காவேரிபுரம் கிராமத்தைச் சேர்ந்த கணேசன், ஈரோடு மாவட்டம் மலையம்பாளையம் கிராமம் இளமுருகு, சென்னை குரோம்பேட்டை அபிமன்யு, காஞ்சிபுரம் மாவட்டம் வாயலூர் கிராமம் சாம்டேனியல், பாலாஜி, காஞ்சிபுரம் மாவட்டம் கீழம்பி கிராமம் வடிவேல், திருவண்ணாமலை மாவட்டம் கருங்கல்மேடு கிராமம் தர்மராஜ் ஆகியோர் உயிரிழந்தனர். மேலும், கன்னியாகுமரி மாவட்டம் செண்பகராமன் புதூர் கிராமம் ஆனந்த சிவகுமார், சேலம் மாவட்டம் அத்தனூர் கிராமம் பழனிசாமி, தருமபுரி மாவட்டம் அலமேலுபுரம் குமாரவேல், கோவை மாவட்டம் பீளமேடு தனலட்சுமி, ஜெயகுமார் ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.

  இவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

  அவர்களது குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம் வழங்க உத்தரவிட்டுள்ளேன்.

  சேலம் மாவட்டம் மாசிநாயக்கன்பட்டி அருகே சேலம்-ஆத்தூர் சாலையில் பிப்ரவரி 4-ஆம் தேதி நடைபெற்ற விபத்தில் 14 பேர் காயமடைந்துள்ளது குறித்து வருத்தமடைகிறேன்.

  விபத்தில் பலத்த காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.25 ஆயிரமும், சாதாரண காயமடைந்தவர்களுக்கு ரூ.10 ஆயிரமும் முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளதாக ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai