சுடச்சுட

    

    பாஜக கூட்டணியில் தேமுதிக இடம்பெறுவது உறுதி: இல.கணேசன், தமிழருவி மணியன் தகவல்

    By dn  |   Published on : 03rd March 2014 01:41 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணியில் தேமுதிக இடம்பெறுவது உறுதி என்று அக் கட்சியின் மூத்த தலைவர் இல.கணேசனும், காந்திய மக்கள் கட்சியின் தலைவர் தமிழருவி மணியனும் கூறினர்.

    ரெளத்திரம் மாத இதழின் 2-ஆம் ஆண்டு துவக்க விழா ராஜா அண்ணாமலை மன்றத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

    இதில் இல.கணேசன் பேசியது:

    பாஜகவை மதவாத கட்சி என்று கூறினால், அதை முஸ்லிம்கள் கூட நம்பமாட்டார்கள். குஜராத் முஸ்லிம்களுக்கு என்ன செய்துள்ளீர்கள் என்று மோடியிடம் ஒரு முறை கேள்வி எழுப்பப்பட்டது.

    அதற்கு மோடி, ஒன்றுமே செய்யவில்லை என்று கூறினார். பிறகு, முஸ்லிம்கள் என்றோ, இந்துக்கள் என்றோ தனிப்பட்ட முறையில் நான் (மோடி) எதுவும் செய்யவில்லை. ஒட்டுமொத்த குஜராத் மக்களுக்காக பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைச் செயல்படுத்தினேன். அந்தத் திட்டங்களின் பயனை எல்லா மக்களும் பெற்றனர் என்றார்.

    இந்த வழியில்தான் மோடி தலைமையில் மத்தியில் அமையும் பாஜக அரசும், ஒட்டுமொத்த இந்திய மக்களுக்கான அரசாகச் செயல்படும். ஊழலற்ற இந்தியாவைக் கட்டமைப்பதுடன், இந்தியாவை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்லும் வகையில் திட்டங்களை வகுத்துச் செயல்படுத்துவோம்.

    தமிழகத்தில் பாஜக கூட்டணியில் மதிமுக இடம்பெறுவது உறுதி. கூட்டணியில் எந்தத் தொந்தரவும் கொடுக்காமல் உள்ள கட்சி அது. தேமுதிகவும் பாஜக கூட்டணியில் இடம்பெறுவது உறுதி. தில்லியில் இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினோம். நிச்சயம் பாஜக கூட்டணியில் தேமுதிக இடம்பெறும். திமுகவுடன் கூட்டணி அமைப்பது தொடர்பாக பாஜக சிந்தித்துக்கூட பார்த்ததில்லை. அப்படியொரு கூட்டணி நிச்சயம் அமையவே அமையாது என்றார் இல.கணேசன்.

    தமிழருவி மணியன் பேசியது: பாஜகவை மதவாதக் கட்சி என்று அரசியல் ஆதாயத்துக்காகவே சில கட்சிகள் கூறுகின்றன. முஸ்லிம் லீக் என்ற கட்சியோடு கூட்டணி அமைத்துக் கொண்டு, மதவாதம் பற்றி பேசினால் அது சரியாக இருக்குமா?

    தமிழகத்தில் உள்ள அனைத்து பாஜக தலைவர்களையும் நான் அறிவேன். அவர்கள் யாருக்கும் மதவாத எண்ணங்கள் அறவே இல்லை.

    உண்மையில் மதவாதமும், சாதியவாதமும் பேசுகிறவர்கள் தனிப்பட்ட முறையில் தங்களை வளர்த்துக் கொள்கிறார்களே ஒழிய, அந்த மதத்தைச் சார்ந்தவர்களுக்கும், சாதியைச் சார்ந்தவர்களுக்கும் அவர்களால் ஒரு பயனும் இல்லை.

    பாஜகவை மதவாத கட்சி என்று சொல்வதற்கு திமுக தலைவர் கருணாநிதிகூட தற்போது தயங்குகிறார். ஏனெனில் பாஜக ஆட்சிக்கு வந்துவிட்டால் என்ன செய்வது என்று இப்போதே மோடி என் நண்பர் என கருணாநிதி ஒரு துண்டைப் போட்டு வைக்கிறார். அது எடுபடாது. பாஜகவுடனான கூட்டணியில் மதிமுக இடம்பெற்றுவிட்டது. நாளை (திங்கள்கிழமை) விஜயகாந்த் வருகிறார். பாஜக கூட்டணியில் இடம்பெறுகிறார். முதலில், பாஜகவுடன் கூட்டணி அமைக்காமல், திமுகவுடன், காங்கிரஸூடன் கூட்டணி அமைக்கலாமா என்று ஒரு யோசனை விஜயகாந்துக்கு இடையில் வந்தது.

    உடனே, உளுந்தூர்பேட்டையில் நடத்திய ஊழல் எதிர்ப்பு மாநாடு விஜயகாந்துக்கு நினைவு வந்துள்ளது. இப்போது திமுக, காங்கிரúஸாடு கூட்டணி வேண்டாம் என்று முடிவு எடுத்துள்ளார். பாஜக கூட்டணியில் அவர் நிச்சயம் இடம்பெறுவார்.

    வேறு சில கட்சிகளும் கூட்டணியில் இடம்பெறுகின்றன. பாமக இன்னும் முடிவு தெரிவிக்கவில்லை. அவர்களும் பாஜக கூட்டணியில் இடம்பெற வேண்டும். ஒருவேளை அவர்கள் கூட்டணியில் இடம்பெறாவிட்டாலும் பாஜகவுக்கு நஷ்டம் ஒன்றுமில்லை. மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணி வெற்றிபெறும் என்றார் அவர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai