சுடச்சுட

    

    பிளஸ் 2 தேர்வு மையங்கள் அருகே ஒலிபெருக்கி வேண்டாம்:  வைகோ வேண்டுகோள்

    By dn  |   Published on : 03rd March 2014 02:27 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    vaiko (2)

    பிளஸ் 2 தேர்வு மையங்கள் அருகே ஒலிபெருக்கிகளை இயக்க வேண்டாம் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    இது தொடர்பாக ஞாயிற்றுக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:-

    தமிழக அரசின் பள்ளிக் கல்வித் தேர்வுத்துறை சார்பில் நடத்தப்படும் பிளஸ் 2 வகுப்பு பொதுத்தேர்வுகள் மார்ச் 3-ஆம் தேதியும், 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மார்ச் 26-ஆம் தேதியும் தொடங்குகின்றன.

    பல இலட்சம் மாணவர்கள் இத்தேர்வுகளை எழுதுகின்றனர்.

    மாணவர்களை அடுத்தகட்ட உயர்கல்விக்கு அழைத்துச் செல்லும் நுழைவாயிலாக இத்தேர்வுகள் விளங்குகின்றன.

    பொதுத்தேர்வை எதிர்கொண்டு சிறப்பாக எழுதி வெற்றிபெற, எனது உளமார்ந்த வாழ்த்துகளை மாணவச் செல்வங்களுக்குத் தெரிவிக்கிறேன்.

    மாணவர்களுக்கு உதவிடும் வகையில், பொதுத்தேர்வு நடைபெறும் காலங்களிலும், தேர்வு மையங்கள் அமைந்துள்ள பள்ளிக்கூடப் பகுதிகளிலும் அரசியல் கட்சிகளோ, இதர அமைப்புகளோ, திருவிழா கொண்டாடும் அமைப்பினரோ சத்தமாக ஒலிபெருக்கியை இயக்கிடும் முறையை முற்றாகத் தவிர்த்திட முன்வர வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai