சுடச்சுட

  

  ராஜபட்சவை பிரதமர் சந்திப்பது தமிழர்களைப் புறக்கணிக்கும் செயல்: கருணாநிதி

  By dn  |   Published on : 03rd March 2014 12:40 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  karunanidhi (3)

  இலங்கை அதிபர் ராஜபட்சவை, இந்திய பிரதமர் மன்மோகன் சிங் சந்திப்பது என்பது, தமிழர்களையும், தமிழகத்தையும் புறக்கணிக்கும் செயலாகும் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

  இது தொடர்பாக ஞாயிற்றுக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:-

  ராஜபட்சவும், மன்மோகன் சிங்கும் மியான்மரில் சந்தித்துப் பேசப் போவதாகச் செய்திகள் வருகின்றன. இலங்கையில் நடந்தது போர்க் குற்றங்கள்தான் என்றும், அது தொடர்பான சுதந்திரமான நம்பகமான சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் தமிழ் உணர்வு கொண்ட அனைவரும் வலியுறுத்தி வருகின்றனர்.

  இலங்கைக்கு எதிராக இந்தியாவே தனித் தீர்மானம் ஒன்றினை, ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் கொண்டு வரவேண்டும் என்று வலியுறுத்தி வருகிறோம்.

  இந்தச் சூழலில் ராஜபட்சவை மன்மோகன் சிங் சந்தித்துப் பேசுவது என்பது, தமிழர்களையும், தமிழகத்தையும் புறக்கணிக்கும் செயலாகும்.

  மத்திய அரசும், காங்கிரஸ் கட்சியும் ஏன்தான் இப்படியெல்லாம் செய்கிறார்களோ என்பதைப் புரிந்துகொள்ள முடியவில்லை.

   

  திட்டமும், தாமதமும்: 2012 பிப்ரவரி 29-இல் சட்டப்பேரவையில் முதல்வர் ஜெயலலிதா 110-வது விதியின் கீழ் ஓர் அறிக்கையை படித்தார். அதில், 660 மெகாவாட் திறன் கொண்ட எண்ணூர் அனல் மின் விரிவாக்கத் திட்டம் என்னும் ஒரு புதிய திட்டத்தைச் செயல்படுத்த உள்ளோம் என்று ஜெயலலிதா அறிவித்தார்.

  இதற்கான தமிழக அரசின் ஆணை 2012 மார்ச் 30-ஆம் தேதியும், மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் அனுமதி 2013 ஜனவரி 14-ஆம் தேதியும், மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதி, அதே ஆண்டு பிப்ரவரி 18-ஆம் தேதியும் கிடைத்துள்ளது.

  ஆனால், இந்தத் திட்டத்துக்கு ஜெயலலிதா ஓராண்டுக்குப் பிறகு இப்போதுதான் அடிக்கல் நாட்டுகிறார். இதிலிருந்தே அதிமுக அரசு எந்த அளவுக்கு அக்கறையோடு மின் உற்பத்தி விவகாரத்தில் விரைந்து செயல்படுகிறது என்பதைப் புரிந்துகொள்ள முடியும்.

  2011 - ஆம் ஆண்டு நிதி நிலை அறிக்கையில், "ரூ.4,800 கோடி செலவில், 800 மெகாவாட் உடன்குடி விரிவுத் திட்டம், ரூ.9,600 கோடியில் 1,600 மெகாவாட் உப்பூர் அனல் மின் திட்டம், ரூ.3,600 கோடியில் பழைய எண்ணூர் அனல் மின் நிலையத்துக்குப் பதிலாக 600 மெகாவாட் திறன்கொண்ட புதிய மின் இயந்திரம் நிறுவும் திட்டம், ரூ.4,800 கோடியில் 800 மெகாவாட் தூத்துக்குடி நான்காம் நிலைத் திட்டம்' ஆகியவை தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

  இதன் மூலம் ரூ.22,800 கோடி முதலீட்டில் 3,800 மெகாவாட் மின்சார உற்பத்தி கூடுதலாகக் கிடைக்கும் என்று கூறினர்.

  இந்தத் திட்டங்கள் எல்லாம் அறிவித்து, 3 ஆண்டுகள் ஆகின்றன. இதன் நிலை என்ன என்பதை மக்களவைத் தேர்தல் பிரசாரத்துக்குச் செல்வதற்கு முன்பு ஜெயலலிதா அறிவிப்பாரா என்று கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai