சுடச்சுட

  

  முதல்வர் ஜெயலலிதா காஞ்சிபுரத்தில் பிரசாரத்தை தொடங்கிய அதே வேளையில் தமிழகம் மற்றும் புதுவை உள்பட 40 தொகுதிகளிலும் அதிமுக வேட்பாளர்கள் பிரசாரத்தை திங்கள்கிழமை (மார்ச் 3) தொடங்கினர்.

  இதன்படி, திருவள்ளூரில் (தனி) டாக்டர் பி.வேணுகோபால், வடசென்னையில் டி.ஜ.வெங்கடேஷ்பாபு, மத்திய சென்னையில் எஸ்.ஆர்.விஜயகுமார், தென்சென்னையில் டாக்டர் ஜெ.ஜெயவர்தன், வேலூரில் பா.செங்குட்டுவன், விழுப்புரத்தில் (தனி) எஸ்.ராஜேந்திரன், சேலத்தில் வி.பன்னீர்செல்வம், கோவையில் ஏ.பி.நாகராஜன், திருச்சியில் ப.குமார், கடலூரில் ஆ.அருண்மொழித்தேவன், தஞ்சாவூரில் கு.பரசுராமன், மதுரையில் ரா.கோபாலகிருஷ்ணன், தூத்துக்குடியில் ஜெ.ஜெயசிங், திருநெல்வேலியில் கே.ஆர்.பி.பிரபாகரன், புதுச்சேரியில் எம்.வி.ஓமலிங்கம் உள்ளிட்ட 40 தொகுதிகளின் வேட்பாளர்கள் தங்கள் பிரசாரத்தை தொடங்கினர்.

  இதில் அதிமுகவின் தென்சென்னை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளரும், முன்னாள் அமைச்சர் டி.ஜெயகுமாரின் மகனுமான ஜெ.ஜெயவர்தன் மயிலாப்பூர் ஆர்.கே.மடம் சாலை மற்றும் வடக்கு மாட வீதி சந்திப்பிலிருந்து தனது பிரசாரத்தை தொடங்கினார்.

  திறந்த வேனில் பிரசாரத்தை மேற்கொண்ட ஜெயவர்தனை ஆதரித்து அதிமுகவின் கழக அமைப்புச் செயலாளர் விசாலாட்சி நெடுஞ்செழியன், சமூக நலத்துறை அமைச்சர் பா.வளர்மதி, தென்சென்னை (தெற்கு) மாவட்ட செயலாளர் வி.என்.ரவி, தென்சென்னை (வடக்கு) மாவட்டச் செயலாளர் வி.பி.கலையராஜன், சட்டப்பேரவை உறுப்பினர்கள் செந்தமிழன், கே.கந்தன், அசோக், ராஜலட்சுமி, சென்னை மாநகர மேயர் சைதை.துரைசாமி, மாவட்ட மகளிரணி செயலாளர் சரஸ்வதி ரங்கசாமி உள்ளிட்டோர் பிரசாரம் செய்தனர். பிரசாரத்தில் அதிமுகவின் பல்வேறு அணிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.

  இதே போல் தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40 தொகுதிகளின் வேட்பாளர்களும் தங்கள் பிரசாரத்தை தொடங்கினர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai