Enable Javscript for better performance
அனைத்துப் பிரச்னைகளுக்கும் மாநில அரசால் மட்டுமே தீர்வு காண முடியாது: முதல்வர் ஜெயலலிதா- Dinamani

சுடச்சுட

    

    அனைத்துப் பிரச்னைகளுக்கும் மாநில அரசால் மட்டுமே தீர்வு காண முடியாது: முதல்வர் ஜெயலலிதா

    By dn  |   Published on : 04th March 2014 01:21 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    jaya_election_campaign

    அனைத்துப் பிரச்னைகளுக்கும் மாநில அரசால் மட்டுமே தீர்வு காண முடியாது என்று முதல்வரும் அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா திங்கள்கிழமை பேசினார்.

    மக்களவைத் தேர்தல் பிரசாரத்தை காஞ்சிபுரம் (தனி) தொகுதியில் இருந்து திங்கள்கிழமை அவர் தொடங்கினார். பிரசார கூட்டத்தில் அவர் பேசியது:

    தமிழகத்தில் மூன்றாவது முறையாக ஆட்சிப் பொறுப்பினை ஏற்றது முதல் மக்களுக்கான பல்வேறு நன்மைகளைச் செய்து வருகிறேன். இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் உணவுப் பாதுகாப்பினை உறுதி செய்யும் விதமாக, அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் விலையில்

    லாத அரிசி வழங்கப்படுகிறது.

    இதேபோன்று, 81 லட்சம் குடும்பத்தினருக்கு இலவச கிரைண்டர், மிக்ஸி மற்றும் மின்விசிறி ஆகியன வழங்கப்பட்டுள்ளன. 34 ஆயிரத்து 687 பேருக்கு கறவைப் பசுக்களும், 3 லட்சத்து 98 ஆயிரம் பேருக்கு 16 லட்சம் வெள்ளாடுகளும் அளிக்கப்பட்டுள்ளன. மாணவ மாணவிகளுக்கு 23 லட்சம் இலவச லேப்டாப்கள் வழங்கப்பட்டதுடன், முதல்வரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ், கடந்த இரண்டை ஆண்டுகளில் 6 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர்.

    மாற்றத்தை ஏற்படுத்துவீர்கள்: தமிழக மீனவர்கள் பிரச்னையில் இலங்கை அரசின் அராஜக நடவடிக்கைகள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க மத்தியில் ஒரு மாற்றம் ஏற்பட வேண்டும். அந்த மாற்றத்தை உங்களால்தான் ஏற்படுத்த முடியும். அந்த மாற்றத்தை நீங்கள் நிச்சயம் ஏற்படுத்துவீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.

    இடஒதுக்கீடு உயரும்: தமிழகத்தில் நடைமுறையில் உள்ள 3.5 சதவீத இட ஒதுக்கீட்டினை அதிகப்படுத்தித் தர வேண்டும் என்று இஸ்லாமிய அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன. அவர்களது கோரிக்கை மாநில பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஆணையத்தின் பரிந்துரை கிடைக்கப் பெற்றவுடன் அதன்மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

    மத்திய அரசின் தவறான கொள்கைகளால் விலைவாசி விஷம் போன்று ஏறிவந்தாலும், அதிலிருந்து சாமானிய மக்களைக் காக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பாமாயில், உளுத்தம் பருப்பு, துவரம் பருப்பு ஆகியன மலிவு விலையில் வழங்கும் சிறப்பு பொது விநியோகத் திட்டம், காய்கறி விலையைக் கட்டுப்படுத்த பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள், அனைத்து மாநகராட்சிகளிலும் அம்மா உணவகங்கள் எனப் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

    அனைத்துப் பிரச்னைகளுக்கும் தீர்வில்லை: மாநிலத்தில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வரும் சூழ்நிலையிலும், மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு மாற்றாந்தாய் மனப்போக்குடன் செயல்பட்டு வருகிறது. இதற்கு திமுக துணை நிற்கிறது. அவற்றை மீறி தமிழகம் முன்னேற்றப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது. இருப்பினும் அனைத்துப் பிரச்னைகளுக்கும் தீர்வு கண்டு விட்டோமா என்றால் நிச்சயமாக இல்லை என்பதுதான் விடை. மாநில அரசு மட்டுமே அனைத்துப் பிரச்னைகளுக்கும் தீர்வு காண முடியாது. மீனவர்கள் பிரச்னை, அண்டை மாநில நதிநீர் பிரச்னை, கச்சத்தீவு பிரச்னை, மண்ணெண்ணெய் ஒதுக்கீடு என பெரும்பாலான பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டிய பொறுப்பு மத்திய அரசிடம்தான் உள்ளது. இதனை இப்போதுள்ள காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு செய்கிறதா என்றால் நிச்சயமாக இல்லை. மாறாக தமிழகத்துக்கும், தமிழர்களுக்கும் மத்திய காங்கிரஸ் அரசு துரோகம் இழைத்துக் கொண்டிருக்கிறது என்றார் முதல்வர் ஜெயலலிதா.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai