சுடச்சுட

    
    bullock_race

    புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே மாசித் திருவிழாவையொட்டி, கோவிலூரில் மாட்டுவண்டி பந்தயம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

    ஆலங்குடி அருகேயுள்ள கோவிலூரில் மாசி மாதம் நடைபெறும் திருவிழாவில் ஜல்லிக்கட்டு நடத்துவது வழக்கம். இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு அரசின் கடும் விதிமுறைகளால் ஜல்லிக்கட்டு நடத்த முடியவில்லை. இதனால், மாட்டுவண்டி பந்தயம் நடத்தப்பட்டது.

    இதில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த மாடுகள் கலந்து கொண்டன. அதில் 10 மைல் தூர பந்தயத்தில் தஞ்சை அம்மன்பேட்டை ராஜேஸ்வரியின் மாடுகள் முதல் பரிசும், தேனி உப்பாரப்பட்டி கவுசிக் மாடுகள் 2-ம் பரிசும், திருச்சி ஆருமுகச்சாமியின் மாடுகள் 3-ம் பரிசும் பெற்றன. இரண்டாவதாக நடைபெற்ற 6 மைல் தூர பந்தயத்தில் திருச்சி கிழியூர் அரியநாராயணன் மாடுகள் முதல் பரிசும், துவாக்குடி அமெரிக்க சுப்பிரமணியின் மாடுகள் 2-ம் பரிசும், தேனி உப்பாரப்பட்டி கவுசிக் மகாதேவன் மாடுகள் 3-ம் பரிசும் பெற்றன.

    இதற்கான ஏற்பாடுகளை கோவிலூர் குப்பகுடி, குழந்தைவிநாயகர்கோட்டை, புதுக்கோட்டைவிடுதி, நெம்மக்கோட்டை, கரும்பிரான்கோட்டை, மேலக்கோட்டை, பாத்தம்பட்டி ஆகிய கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் செய்திருந்தனர். ஆலங்குடி போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai