சுடச்சுட

  

  இன்று மார்க்சிஸ்ட் பொதுக்குழு: கூட்டணி குறித்து முக்கிய முடிவு?

  By dn  |   Published on : 04th March 2014 01:37 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலப் பொதுக்குழுக் கூட்டம் சென்னையில் செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ளது.

  தியாகராய நகரில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன், மத்தியக் குழு உறுப்பினர் டி.கே. ரங்கராஜன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்கின்றனர்.

  தேசிய அளவில் காங்கிரஸ், பாஜகவுக்கு மாற்றாக 3-ஆவது அணி அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தமிழகத்தில் அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ளது.

  கடந்த பிப்ரவரி 3-ஆம் தேதி முதல்வர் ஜெயலலிதாவை அவரது இல்லத்தில் சந்தித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச்செயலாளர் பிரகாஷ் காரத், மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷணன், மத்தியக் குழு உறுப்பினர் டி.கே. ரங்கராஜன் ஆகியோர் அதிமுகவுடனான கூட்டணியை உறுதிப்படுத்தினர்.

  அதுபோல இந்திய கம்யூனிஸட் கட்சியின் பொதுச்செயலாளர் சுதாகர் ரெட்டி, மூத்த தலைவர் ஏ.பி. பரதன், மாநிலச் செயலாளர் தா. பாண்டியன் ஆகியோர் பிப்ரவரி 2-ஆம் தேதி ஜெயலலிதாவைச் சந்தித்து இந்திய கம்யூனிஸ்ட் - அதிமுக கூட்டணியை அறிவித்தனர்.

  அதனைத் தொடர்ந்து பிப்ரவரி 5-ஆம் தேதி அதிமுக தலைமை அலுவலகத்தில் இடதுசாரி கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு தொடர்பாக, நிதி அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தலைமையிலான அதிமுக குழுவினர் பேச்சு நடத்தினர்.

  அப்போது கடந்த 2009-ஆம் ஆண்டு தேர்தலில் ஒதுக்கப்பட்டதுபோல இரு கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும் தலா 3 தொகுதிகள் ஒதுக்கப்பட வேண்டும் என கம்யூனிஸ்ட் தலைவர்கள் வலியுறுத்தினர்.

  ஆனால், இரு கட்சிகளுக்கும் தலா 1 தொகுதிகள் மட்டுமே தர முடியும் என அதிமுக தரப்பில் கூறப்பட்டதாகத் தெரிகிறது. அதன் பிறகு தொகுதிப் பங்கீட்டு பேச்சு எதுவும் நடைபெறாத நிலையில் புதுச்சேரி உள்பட 40 தொகுதிகளுக்கும் பிப்ரவரி 24-ஆம் தேதி அதிமுக வேட்பாளர்களை அறிவித்தார் ஜெயலலிதா.

  இரு கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் உடன்பாடு ஏற்பட்ட பிறகு அந்தத் தொகுதிகளை அதிமுக விட்டுக் கொடுக்கும் என்று அறிவித்தார். அதனைத் தொடர்ந்து தனது தேர்தல் பிரசாரத்தையும் காஞ்சிபுரத்தில் திங்கள்கிழமை ஜெயலலிதா தொடங்கியுள்ளார். இந்நிலையில் நடப்பு அரசியல் சூழல் குறித்து விவாதிப்பதற்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுக்குழுக் கூடடம் செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது. அதில் தேர்தல் கூட்டணி குறித்து முக்கிய முடிவு எடுக்கப்படும் என அக்கட்சி வட்டாரங்கள தெரிவித்தன.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai