சுடச்சுட

  
  kaalai_maadu

  ஒசூர் அருகே எருது விடும் விழாவில் எருது முட்டியதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தது தொடர்பாக ஊராட்சித் தலைவர் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

  கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் அருகேயுள்ள உள்ளட்டி ஊராட்சிக்கு உள்பட்டது அலேசீபம் கிராமம். இந்தக் கிராமத்தில் செவ்வாய்க்கிழமை எருது விடும் விழா நடைபெற்றது.

  இந்த விழாவில் தமிழகம், கர்நாடகத்தில் இருந்து 500-க்கும் மேற்பட்ட எருதுகள் பங்கேற்றன. சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் கலந்து கொண்டனர்.

  விழா தொடங்கியதும், எருதுகளைப் பிடிக்க முயன்ற போடம்பட்டியைச் சேர்ந்த பவுன்செட்டி மகன் முனிராஜை காளை முட்டியதில் அவருக்கு வயிற்றில் பலத்த காயம் ஏற்பட்டது.

  உடனடியாக அவரை ஒசூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், வழியிலேயே அவர் உயிரிழந்தார்.

  இதையடுத்து, எருது விடும் விழாவுக்கு முன் அனுமதி பெறாமல் ஏற்பாடுகளைச் செய்த ஊராட்சி மன்றத் தலைவர் ராமச்சந்திரன், ஊராட்சி மன்ற உறுப்பினர் ராமமூர்த்தி, ராமன், முனிராஜ், கார்த்திக் ஆகியோரை உத்தனப்பள்ளி போலீஸார் கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai