சுடச்சுட

  

  கூட்டணி அமைகிறதோ, இல்லையோ தேர்தலை எதிர்கொள்ள காங்கிரஸ் தயார்: ஞானதேசிகன்

  By dn  |   Published on : 04th March 2014 01:30 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  gnadesikan

  மக்களவைத் தேர்தலில் கூட்டணி அமைந்தாலும், அமையாவிட்டாலும் தேர்தலை எதிர்கொள்ள காங்கிரஸ் தயாராக உள்ளது என அக்கட்சியின் மாநிலத் தலைவர் பி.எஸ்.ஞானதேசிகன் கூறியுள்ளார்.

  இது தொடர்பாக செய்தியாளர்களிடம் திங்கள்கிழமை அவர் கூறியது:

  வரும் மக்களவைத் தேர்தலில் கூட்டணி அமைப்பது குறித்து பலவேறு கட்சிகளுடன் காங்கிரஸ் மேலிடத் தலைவர்கள் பேசி வருகின்றனர். உரிய நேரத்தில் கூட்டணி குறித்து அறிவிக்கப்படும்.

  மக்களவைத் தேர்தல் பிரசாரத்தின் ஒரு பகுதியாக ஒன்றிய அளவில் பாத யாத்திரை நடைபெறவுள்ளது. தமிழகத்தில் மார்ச் 7-ஆம் தேதி தொடங்கும் இந்த யாத்திரை 7 நாள்களுக்கு நடைபெறும். 10-ஆம் தேதிக்குள் தமிழகம் முழுவதும் பாத யாத்திரையை தொடங்க வேண்டும் என அனைத்து மாவட்டத் தலைவர்களையும் கேட்டுக் கொண்டுள்ளோம்.

   

  தயார்நிலையில் காங்கிரஸ்:கூட்டணி அமைந்தாலும் அமையாவிட்டாலும் தேர்தலை எதிர்கொள்ள காங்கிரஸ் தயாராக உள்ளது. தற்போது காங்கிரஸ் கட்சியின் பலத்தை அதிகரிப்பதில் கவனம் செலுத்தி வருகிறோம்.

  ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்றுள்ள 7 பேரும் குற்றமற்றவர்கள் என சிலர் பேசி வருகின்றனர். இது உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிரான கருத்தாகும். இந்தப் பிரச்னையைப் பயன்படுத்தி நாட்டின் இறையாண்மைக்கு எதிராக தமிழகத்தில் களம் அமைக்க சிலர் முற்படுகின்றனர்.

  இலங்கைத் தமிழர் பிரச்னை தேர்தலில் ஒருபோதும் பாதிப்பை ஏற்படுத்தியதில்லை. இந்தத் தேர்தலிலும் அது ஒரு பிரச்னையாக இருக்காது.

  சத்தியமூர்த்தி பவன் மீது நடத்தப்பட்ட தாக்குதலை தமிழக பாஜக தலைவர் பொன். ராதாகிருஷ்ணன், எச்.ராஜா, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, பழ.நெடுமாறன் ஆகியோர் கண்டித்துள்ளனர். அவர்களுக்கு தொலைபேசி மூலம் நன்றி தெரித்தேன்.

  இந்தத் தாக்குதலை திமுக தலைவர் கருணாநிதியும் கண்டித்துள்ளார். இதற்காக அவருக்கும் நன்றி தெரிவித்து கடிதம் எழுத இருக்கிறேன்.

  அகில இந்திய மாணவர் காங்கிரஸின் தேசிய மாநாடு மார்ச் 6, 7 ஆகிய தேதிகளில் தில்லியில் நடைபெறவுள்ளது. இதில் நாடு முழுவதும் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட 3 ஆயிரம் மாணவப் பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளனர்.

  தமிழகத்திலிருந்து மாநிலத் தலைவர் சுனில்ராஜா தலைமையில் 100 பிரதிநிதிகள் இதில் பங்கேற்க தில்லி செல்கின்றனர். நாடு எதிர்நோக்கியுள்ள பிரச்னைகள் குறித்தும், வரும் தேர்தலை எதிர்கொள்வது குறித்தும் அம் மாநாட்டில் விவாதிக்கப்படும் என்றார் ஞானதேசிகன்.

  பேட்டியின்போது மாணவர் காங்கிரஸ் மாநிலத் தலைவர் சுனில்ராஜா உடனிருந்தார்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai