சுடச்சுட

    

    கொள்ளிடம் ஆற்றில் கரை ஒதுங்கிய டால்பின்: உயிருடன் ஆழ்கடலில் சேர்ப்பு

    By dn  |   Published on : 04th March 2014 11:11 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    dolphin

    நாகை மாவட்டம், சீர்காழி அருகே வழிதவறி கொள்ளிடம் ஆற்றுக்கு வந்த டால்பின் மீண்டும் கடலில் விடப்பட்டது.

    சீர்காழி வட்டம், கொள்ளிடம் ஆற்றில் செவ்வாய்க்கிழமை காலை ஒரு டால்பின் மீன் கரை ஒதுங்கியது. காலை வேளையில் கடல் நீர் ஆற்றில் உட்புகுவதும், மாலையில் ஏறிய தண்ணீர் வடிவதும் வழக்கமாகும்.

    பழையார் கொள்ளிடம் ஆற்று முகத்துவாரத்தின் வழியாக, வழிதவறி ஆற்றுக்குள் வந்த 6 அடி நீளம், 300 கிலோ எடை, 5 அடி சுற்றளவு கொண்ட டால்பின் தண்ணீர் குறைந்த பகுதியில் நீந்த முடியாமல், உயிருடன்

    கரைஒதுங்கியது. இதை அந்தப் பகுதி மக்கள் ஆர்வமுடன் பார்க்க திரண்டனர்.

    தகவலறிந்து வந்த வனத் துறையினர், மீனவர்கள் உதவியுடன் 3 மணி நேர போராட்டத்திற்குப் பிறகு டால்பினை பத்திரமாக மீட்டு, பைபர் படகு மூலம் ஆழ்கடலில் கொண்டு சேர்த்தனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai