சுடச்சுட

  

  ஜயங்கொண்டம் அனல்மின் திட்டத்துக்கு நிலம் கொடுத்த விவசாயிகள் காலவரையற்ற உண்ணாவிரதம்

  By dn  |   Published on : 04th March 2014 02:38 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  land

  அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டம் பழுப்பு நிலக்கரி அனல் மின் திட்டத்தில் நிலம் கொடுத்த 23 கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் உரிய இழப்பீடு கேட்டு சாகும்வரை தொடர் உண்ணாவிரதப் போரட்டத்தை திங்கள்கிழமை தொடங்கினர்.

  அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டத்தில் பழுப்பு நிலக்கரி அனல் மின் திட்டத்தைச் செயல்படுத்த 20 ஆயிரம் ஏக்கர் நிலம் கையகப்படுத்தத் திட்டமிட்டு, முதல்கட்டமாக ஜயங்கொண்டம் பகுதியைச் சுற்றியுள்ள மேலூர், புதுகுடி, கீழகுடியிருப்பு, கொம்மேடு, மருக்காலங்குறிச்சி, வடுகர்பாளையம், காட்டாத்தூர், குளத்தூர், தேவனூர், இலையூர், வாரியங்காவல், கோரியம்பட்டி, சூரியமணல், உடையார்பாளையம் கிழக்கு, கூவத்தூர், கல்லாத்தூர், தண்டலை, மங்களம், செங்குந்தபுரம், ஜயங்கொண்டம், இளமங்களம், செட்டிகுழிபள்ளம், கரைமேடு ஆகிய கிராம விவசாயிகளிடம் இருந்து சுமார் 10 ஆயிரம் ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு, அதற்கு இழப்பீட்டுத் தொகையாக ஏக்கருக்கு ரூ. 15 ஆயிரம் முதல் 25 ஆயிரம் ரூபாய் வரையே வழங்கப்பட்டது.

  ஆனால் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்த மக்கள் அந்தத் தொகையை பெற்றுக் கொண்டனர். பின்னர் உரிய இழப்பீடு கோரி ஜயங்கொண்டத்தில் இதற்கென தனியாக ஏற்படுத்தப்பட்ட இரண்டு சிறப்பு நீதிமன்றங்களில் 11,489 வழக்குகள் தொடரப்பட்டன.

  இதில் 500-க்கும் மேற்பட்ட வழக்குகள் விசாரிக்கப்பட்டு நிலம் கொடுத்தோருக்கு ஒரு சென்ட் நிலத்திற்கு ரூ. 2750-ம், ஆறுதல் தொகையாக அதில் 30 சதமும், நிலம் கையகப்படுத்திய தேதியில் இருந்து ஆண்டுக்கு 9 சத வட்டி மற்றும் முழுத் தொகையும் வழங்கும் காலம் வரை 15 சத வட்டியும் சேர்ந்து முன்பு வழங்கப்பட்ட தொகைபோக மீதித் தொகையை வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது.

  மேலும் இப்பகுதியில் அதிகளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ள முந்திரி மரத்துக்கு தலா ரூ. 3 ஆயிரமும் இதேபோல் ஆறுதல் தொகை மற்றும் வட்டியும் வழங்குமாறு தனி வட்டாட்சியர் (நிலம் எடுப்பு) மற்றும் தமிழ்நாடு தொழில் வளர்ச்சி கழகத்துக்கு உத்தரவிட்டார்.

  ஆனால் இத்திட்டத்தைச் செயல்படுத்துவதாக இருந்த என்.எல்.சி. நிறுவனம் இத்திட்டத்தைக் கைவிடுவதாக அறிவித்துள்ளதால் இப்பகுதி விவசாயிகளான தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

  எனவே இத்திட்டத்தை உடனடியாகச் செயல்படுத்தி நீதிமன்ற உத்தரவின்படி உரிய இழப்பீடு வழங்க வேண்டும். இல்லையெனில் நிலத்தை விவசாயிகளிடமே ஒப்படைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, ஜயங்கொண்டம் பழுப்பு நிலக்கரி அனல் மின் திட்ட வட்டாட்சியர் அலுவலகம் முன் 500-க்கும் மேற்பட்ட மக்கள் சாகும்வரை தொடர் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai