சுடச்சுட

  

  திமுக கூட்டணியில் புதிய கட்சிகளுக்கு இடம் இருப்பதாகத் தெரியவில்லை: கருணாநிதி பேட்டி

  By dn  |   Published on : 04th March 2014 01:33 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  karunanidhi (3)

  திமுக கூட்டணியில் இனி புதிய கட்சிகளுக்கு இடம் இருப்பதாகத் தெரியவில்லை என திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்தார்.

  இது தொடர்பாக செய்தியாளர்களின் கேள்விகளுக்கு திங்கள்கிழமை இரவு அவர் அளித்த பதில்:

  கேள்வி: இன்றுடன் நேர்காணல் முடிந்து விட்டது. வேட்பாளர்கள் அறிவிப்பு எப்போது?

  பதில்: அதற்காக உள்ள குழுவினர் அமர்ந்து ஆலோசித்து, விவாதித்து, எந்தெந்த தொகுதிக்கு எந்தெந்த வேட்பாளர்கள் என்பதை முடிவு செய்வார்கள்.

  கேள்வி: திமுக கூட்டணியில் புதிய கட்சிகளுக்கு இடம் இருக்கிறதா?

  பதில்: இனி புதிய கட்சிகளுக்கு இடம் இருப்பதாகத் தெரியவில்லை.

  கேள்வி: இந்தியா முழுவதையும் திரும்பிப் பார்க்க வைக்கும் வகையில் திமுக தேர்தல் அறிக்கை இருக்கும் எனக் கூறப்படுகிறதே? என்னென்ன விஷயங்கள் அதில் இடம் பெறும்?

  பதில்: இன்னும் இரண்டு நாள்களில் தேர்தல் அறிக்கை வெளியிடப்படும். படித்துப் பார்த்தால் புரியும்.

  கேள்வி: தேர்தல் அறிக்கையில் பிரதான விஷயமாக எது இடம் பெறும்?

  பதில்: தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்ட பிறகு தெரியும்.

  கேள்வி: கூட்டணிக் கட்சிகளுக்கு எந்தெந்த தொகுதி என்பதை எப்போது முடிவு செய்வீர்கள்?

  பதில்: இன்னும் இரண்டு நாள்களில் முடிவு செய்யப்படும்.

  கேள்வி: அதிமுகவைப் போல திமுகவிலும் புதியவர்களுக்கு அதிக வாய்ப்புகள் கிடைக்குமா?

  பதில்: வேட்பாளர் பட்டியல் விரைவில் வெளியிடப்படவிருக்கிறது. அதன் பிறகு இதற்கு பதில் கிடைக்கும்.

  கேள்வி: காஞ்சிபுரத்தில் தேர்தல் பிரசாரத்தைத் தொடங்கிய முதல்வர் ஜெயலலிதா, 2ஜி அலைக்கற்றை விவகாரத்தை முன்னிறுத்திப் பேசியிருக்கிறாரே?

  பதில்: பெங்களூரில் நடைபெறும் சொத்துக் குவிப்பு வழக்கை அவர் மறந்திருப்பார் என நினைக்கிறேன் என்றார் கருணாநிதி.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai