சுடச்சுட

  

  துப்புரவு ஊழியர்கள் பணி நிரந்தரம்: உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை

  By dn  |   Published on : 04th March 2014 01:53 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  hc

  துப்புரவு ஊழியர் பணி நிரந்தரம் தொடர்பான தனி நீதிபதி உத்தரவுக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை இடைக்காலத் தடை விதித்தது.

  தமிழக பேரூராட்சிகள் இயக்குநர், நெல்லை மண்டல உதவி இயக்குநர், நாரணம்மாள்புரம் பேரூராட்சி செயலர் ஆகியோர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்களை விசாரித்த நீதிபதி வி.ராமசுப்பிரமணியன், வி.எம்.வேலுமணி ஆகியோர் அடங்கிய அமர்வு இவ்வாறு உத்தரவிட்டது.

  உள்ளாட்சி மன்றங்களில் 1997-ல் இருந்து 1999-ம் ஆண்டு வரையில் தாற்காலிகமாக பணியாற்றிய துப்புரவு ஊழியர்களை 2006-ம் ஆண்டு அரசு பணி நிரந்தரம் செய்தது. இவர்களில் நெல்லை மாவட்டம் தாழையூத்தைச் சேர்ந்த ஜி.முருகன் உள்ளிட்ட 50 பேர், தங்களை 2001-ம் ஆண்டில் இருந்து பணி வரன்முறைப்படுத்துமாறு கோரி வழக்கு தொடர்ந்தனர். மனுக்களை விசாரித்த உயர் நீதிமன்ற தனி நீதிபதி, மனுதாரர்கள் அனைவரையும் 2001-ம் ஆண்டில் இருந்து பணி நிரந்தரம் செய்து பண பலன்களை வழங்க உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி பேரூராட்சிகள் இயக்குநர் உள்ளிட்டோர் மேல்முறையீடு மனுத் தாக்கல் செய்தனர்.

  மனுவில், 3 ஆண்டுகள் தாற்காலிகமாக பணியாற்றிய துப்புரவு ஊழியர்களை பணி நிரந்தரம் செய்வது என்பது அரசின் விருப்பத்திற்கு உட்பட்டது. இதுதொடர்பான ஒரு வழக்கில் பணி நிரந்தரம் செய்வது அரசின் விருப்பமா அல்லது கட்டாயமா என்ற கேள்வி எழுந்த போது பணி நிரந்தரம் செய்வது கட்டாயமல்ல. அரசின் விருப்பத்தைப் பொருத்தது என உத்தரவிட்டுள்ளது.

  எனவே, 2006-ம் ஆண்டு பணி நிரந்தரம் செய்யப்பட்ட துப்புரவு ஊழியர்களை 2001-ம் ஆண்டில் இருந்து பணி வரன்முறைப்படுத்த வேண்டும் என்ற தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என மனுவில் குறிப்பிட்டுள்ளனர். இம் மனுவை விசாரித்த நீதிபதிகள், தனி நீதிபதி உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்தனர். விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai