Enable Javscript for better performance
தொகுதிப் பங்கீடு: கூட்டணிக் கட்சிகளுடன் திமுக இன்று கலந்தாய்வு- Dinamani

சுடச்சுட

    

    தொகுதிப் பங்கீடு: கூட்டணிக் கட்சிகளுடன் திமுக இன்று கலந்தாய்வு

    By dn  |   Published on : 04th March 2014 01:38 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தொகுதிகளைப் பங்கிடுவது குறித்து ஆலோசிப்பதற்காக திமுக கூட்டணி கட்சிகளின் கூட்டம் செவ்வாய்க்கிழமை (மார்ச் 4) நடைபெறவுள்ளது.

    திமுக கூட்டணியில் தற்போது விடுதலைச் சிறுத்தைகள், புதிய தமிழகம், மனிதநேய மக்கள் கட்சி, இந்திய யூனியன் முஸலிம் லீக் ஆகிய கட்சிகள் இடம்பெற்றுள்ளன.

    மேலும் சில கட்சிகளை கூட்டணியில் சேர்க்க திமுக தலைவர்கள் முயற்சித்து வருகின்றனர். இந்நிலையில் தொகுதிகளைப் பங்கிடுவது தொடர்பாக கூட்டணிக் கட்சிகளுடன் ஆலோசிப்பதற்கான கூட்டம் திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ளது.

    கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு தொடர்பாக பேச்சு நடத்த, திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தலைமையில், துணைப் பொதுச்செயலாளர்கள் துரைமுருகன், வி.பி.துரைசாமி, அமைப்புச் செயலாளர் பெ.வீ.கல்யாணசுந்தரம், வழக்குரைஞர் அணிச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஆகியோரைக் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

    முதல் கட்டமாக இக்குழுவினர் தொகுதிகள் தொடர்பாக கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சு நடத்த உள்ளனர். வேறு கட்சிகள் கூட்டணியில் இடம்பெறாவிட்டால், திமுக 35 தொகுதிகளில் போட்டியிடும் என அக்கட்சியினர் தெரிவிக்கின்றனர். விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு 2 தொகுதிகளும், மற்ற சிறிய கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதியும் ஒதுக்கப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai