சுடச்சுட

    
    tha_pandiyan

    பாஜக, காங்கிரஸ் கட்சிகளை வீழ்த்தவே 3-ஆவது அணி அமைக்கப்பட்டுள்ளது என்றார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் தா. பாண்டியன்.

    திருவாரூரில் ஞாயிற்றுக்கிழமை அக்கட்சி சார்பில் நாடாளுமன்றத் தேர்தல் நிதியளிப்புக் கூட்டம் நடைபெற்றது. கட்சியின் மாவட்டச் செயலர் வீரசேனன் தலைமை வகித்தார்.

    கூட்டத்தில் தா. பாண்டியன் மேலும் பேசியது:

    ராணுவத்தின் மூலம் சர்வாதிகார ஆட்சியை அமைக்க முயற்சி செய்யும் மோடி, பிரதமராக வாய்ப்பே இல்லை. பாஜக, காங்கிரஸ் கட்சிகளை வீழ்த்தவே 3-ஆவது அணி அமைக்கப்பட்டுள்ளது. மத்தியில் 3-ஆவது அணி தலைமையில் ஆட்சி அமைந்தால், நாட்டின் இயற்கை வளங்களை தனியாருக்கு தாரைவார்க்க அனுமதிக்க மாட்டோம்.

    மக்களுக்காக ரத்தம் சிந்திய பூமி நாகை என்பதால், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு நாகை நாடாளுமன்றத் தொகுதி மீது தனி மதிப்பு உண்டு. தொகுதி ஒதுக்கீடு தொடர்பாக அதிமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்தி சுமூக தீர்வு காணப்படும் வரை கட்சியினர் பொறுமை காக்க வேண்டும்.

    "பெருமைமிகு தியாகங்கள் செய்த இடதுசாரிகள், கூட்டணி பேச்சில் காலம் தாழ்த்தி அவலப்படலாமா' என திமுக தலைவர் கருணாநிதி கேட்கிறார். 25 ஆண்டுகள் தமிழகத்தை ஆண்ட நீங்கள் (திமுக) செய்த சாதனைகள் என்ன என்று கூறமுடியுமா, மத்திய ஆட்சியில் பங்கேற்றிருந்தபோது, ஈழத் தமிழர் படுகொலையை தடுத்தீர்களா?. இதுதான் தமிழக மக்களுக்கு நீங்கள் செய்த பெருமைகளா?. தமிழகத்துக்கு ஆற்ற வேண்டிய கடமையை திமுக செய்யவில்லை என்றார் தா. பாண்டியன்.

    முன்னதாக, கூட்டத்தில் தேர்தல் நிதியாக 71,27,822 ரூபாய் வழங்கப்பட்டது.

    திருத்துறைப்பூண்டி எம்எல்ஏ கே. உலகநாதன், முன்னாள் எம்எல்ஏக்கள் வை. சிவபுண்ணியம், கோ. பழனிச்சாமி, முன்னாள் எம்.பி. செல்வராஜ், மாவட்ட துணைச் செயலர் வை. செல்வராஜ் உள்ளிட்ட பலர் கூட்டத்தில் பங்கேற்றனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai