சுடச்சுட

  
  pc

  மத்திய நிதியமைச்சர் சிதம்பரத்தின் மானகிரி இல்லத்துக்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுவருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

  மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கடந்த வாரத்தில் 4 நாள்கள் மானகிரி இல்லத்தில் இரவு தங்கும் வகையில் சுற்றுப்பயணத் திட்டத்தை அமைத்திருந்தார். இதையடுத்து, போலீஸார் அவர் தங்கும் இல்லத்துக்கு பாதுகாப்பு அளித்தனர். கியூ பிரிவு போலீஸார் சோதனை மேற்கொண்டபோது பல்வேறு கோரிக்கைகளுடன் பிப்.25-ஆம் தேதி குண்டு வெடிக்கும் என்று எழுதப்பட்ட துண்டுப் பிரசுரம் கிடைத்தது. இதுகுறித்து விசாரித்து வருவதாக காவல் துறையினர் தெரிவிக்கின்றனர்.

  இந்த நிலையில், அமைச்சர் சிதம்பரம் இல்லத்துக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. திங்கள்கிழமை காலையில் அமைச்சர் தமது இல்லத்திலிருந்து புறப்பட்டு காரைக்குடி அருகே கல்லாங்குடி கோயிலில் நடைபெற்ற முன்னாள் எம்.எல்.ஏ. சுந்தரத்தின் மணிவிழாவில் பங்கேற்றார். பின்னர், திருச்சி சென்று விமானம் மூலம் சென்னை திரும்பியதாக காங்கிரஸ் கட்சியினர் தெரிவித்தனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai