சுடச்சுட

  

  மதுரை மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள ஆர்.கோபாலகிருஷ்ணன் (படம்) திங்கள்கிழமை துணைமேயர் பதவியிலிருந்து ராஜிநாமா செய்தார்.

  மதுரை மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளராக ஆர்.கோபாலகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் திங்கள்கிழமை மாநகராட்சி அலுவலகத்தில், மேயர் வி.வி. ராஜன் செல்லப்பாவிடம், தான் வகித்து வந்த 4-வது வார்டு மாமன்ற உறுப்பினர் மற்றும் துணை மேயர் பதவி விலகலுக்கான கடிதங்களை வழங்கினார்.

  பின்னர், அவருக்கு மாநகராட்சி கருத்தரங்கக் கூடத்தில் நடைபெற்ற பிரிவுபசார நிகழ்ச்சியில் கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ, எம்.எல்.ஏ.க்கள் ஏ.கே. போஸ், சுந்தரராஜன், மண்டலத் தலைவர்கள் பெ.சாலைமுத்து, ராஜபாண்டி, ஜெயவேல், குழுத் தலைவர்கள் கண்ணகி பாஸ்கரன், சுகந்தி அசோக், முனியாண்டி, ராஜலிங்கம், ஜெயபால் உள்ளிட்ட அதிமுக மாமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai