சுடச்சுட

  

  மதுரை மக்களவைத் தொகுதி: அதிமுக வேட்பாளர் மீதான புகார்: போலீஸாருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

  By dn  |   Published on : 04th March 2014 02:33 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  மதுரை மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் மீதான நிலப் பறிப்பு புகார் மீதான விசாரணை தொடர்பாக பதில் மனுத் தாக்கல் செய்யுமாறு மாவட்ட குற்றப் பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.

  எஸ்.ஆலங்குளத்தைச் சேர்ந்த அம்மாபிள்ளை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:

  எனது குடும்பத்துக்குச் சொந்தமான 87 சென்ட் நிலத்தை ஆர்.கோபாலகிருஷ்ணன் (மதுரை மாநகராட்சி முன்னாள் துணை மேயர் மற்றும் மதுரை மக்களவை தொகுதி அதிமுக வேட்பாளர்), ஏ.பாலசுந்தரம், சந்திரா ஆகியோர் வாங்குவதாக ஒப்பந்தம் செய்தனர். ஆனால், அவர்கள் கூறியபடி நிலத்துக்கான பணத்தை வழங்கவில்லை. இதுதொடர்பாக 3 பேர் மீதும் மாவட்ட குற்றப்பிரிவில் புகார் அளித்தேன். ஆனால், போலீஸார் விசாரிக்கவில்லை.

  இதையடுத்து, புகார் மீது நடவடிக்கை எடுக்க போலீஸாருக்கு உத்தரவிடுமாறு வழக்கு தொடர்ந்தேன். மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம் புகாரை விசாரித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது. அந்த உத்தரவில் கால வரம்பு நிர்ணயிக்கப்படவில்லை. இந்த உத்தரவையடுத்து என்னை அழைத்து விசாரித்த போலீஸார், துணை மேயர் உள்ளிட்டோரை அழைத்து விசாரிக்கவில்லை. மேலும், வழக்கை மேற்கொண்டு விசாரிக்காமல் முடித்துவிட்டனர். எனவே, குறிப்பிட்ட கால வரம்பு நிர்ணயித்து துணை மேயர் உள்ளிட்டவர்களை விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மனு நீதிபதி ஜி.எம்.அக்பர் அலி முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில், புகாரில் உண்மைத்தன்மை இல்லாததால் வழக்கை முடித்து விட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, விசாரணை தொடர்பான விவரங்கள் அடங்கிய பதில் மனுவை தாக்கல் செய்ய மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு நீதிபதி உத்தரவிட்டார். விசாரணை மார்ச் 10-ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai