சுடச்சுட

    

    வீட்டில் பதுக்கியிருந்த ரூ.4 கோடி போதைப் பொருள் பறிமுதல்

    By dn  |   Published on : 04th March 2014 03:02 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சாயல்குடியில் ரூ.4 கோடி மதிப்புடைய போதைப் பொருளை வீட்டில் பதுக்கியவரை போலீஸார் கைது செய்தனர்.

    ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி மூக்கையூர் சாலையைச் சேர்ந்தவர் சித்திக்சேட்(36). இவர் வீட்டில் போதைப் பொருளை பதுக்கியிருப்பதாகக் கிடைத்த தகவலின் பேரில் சாயல்குடி போலீஸார் அவரது வீட்டில் சோதனை நடத்தினர்.

    இதில் சித்திக்சேட் வீட்டில் 25 கிலோ கேட்டமைன் போதைப் பொருளை பதுக்கி வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து சித்திக்சேட்டை போலீஸார் திங்கள்கிழமை கைதுசெய்து, போதைப்பொருளை பறிமுதல் செய்தனர்.

    இதன் சர்வதேச சந்தை மதிப்பு ரூ.4 கோடி எனத் தெரிகிறது.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai