சுடச்சுட

  

  காஞ்சிபுரத்தில் நடந்த பிரசார மேடையில் சரியாக 30 நிமிடங்களில் பிரசாரத்தை முடித்துவிட்டு புறப்பட்டார்.

  காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் மரகதம் குமரவேலை ஆதரித்து திங்கள்கிழமை தமிழக முதல்வர் ஜெயலலிதா காஞ்சிபுரத்தில் பிரசாரம் மேற்கொண்டார். காஞ்சிபுரம் அருகே நத்தப்பேட்டையில் அமைக்கப்பட்டிருந்த ஹெலிபேடில் இருந்து இறங்கி, சரியாக மாலை 4.44 மணிக்கு மேடைக்கு வந்த அவரை அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் வரவேற்றனர். இரட்டை இலை சின்னத்தைக் குறிக்கும் வகையில் இரட்டை விரலை ஏந்தி பொதுமக்களை உற்சாகப்படுத்தினார் முதல்வர் ஜெயலலிதா. மேடைக்கு முன்பு கூடியிருந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மகிழ்ச்சியில் ஆரவாரம் செய்தனர். இதைத் தொடர்ந்து சரியாக 4.45 மணிக்கு முதல்வர் ஜெயலலிதா தனது முதல் பிரசார பேச்சை தொடங்கினார். மாலை 5.24 மணிக்கு தனது பேச்சை முடித்தார். பேச்சை முடித்தவுடன் அவர் உடனடியாக மேடையை விட்டு கீழே இறங்கினார்.

  மேடையில் அமைச்சர்கள் ஓ. பன்னீர்செல்வம், நத்தம் ஆர். விஸ்வநாதன், கே.பி. முனுசாமி, ஆர். வைத்திலிங்கம், பி. பழனியப்பன், டி.கே.எம். சின்னையா, காஞ்சிபுரம் நாடாளுமன்றத் தொகுதி பொறுப்பாளர் டாக்டர் மைத்ரேயன் எம்.பி., காஞ்சிபுரம் மேற்கு மாவட்டச் செயலர் வாலாஜாபாத் பா. கணேசன் எம்.எல்.ஏ., சட்டப்பேரவை உறுப்பினர்கள் வி.சோமசுந்தரம், இரா. பெருமாள், கணிதா சம்பத், செய்யூர் ராஜி, தண்டரை மனோகரன், தன்சிங், காஞ்சிபுரம் மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் காஞ்சி பன்னீர்செல்வம், காஞ்சிபுரம் நகர்மன்றத் தலைவர் மைதிலி திருநாவுக்கரசு, காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் ஜீவானந்தம் உள்ளிட்டோர் மேடையில் அமர்ந்திருந்தனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai