சுடச்சுட

    

    இலங்கைக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்: இந்தியா திருத்தம் செய்ய ராமதாஸ் வலியுறுத்தல்

    By dn  |   Published on : 05th March 2014 01:57 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ramadoss

    இலங்கைக்கு எதிராக ஐ.நா.வில் அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தில் இந்தியா திருத்தம் மேற்கொள்ள வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

    இது தொடர்பாக செவ்வாய்க்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:

    இலங்கை மீது போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

    இந்நிலையில் அது தொடர்பான வரைவு தீர்மானத்தை ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் அமெரிக்கா, இங்கிலாந்து, மோரீஷஸ், மாசிடோனியா உள்ளிட்ட 5 நாடுகள் தாக்கல் செய்துள்ளன.

    அதில் இலங்கையில் சிங்கள அரசும், விடுதலைப் புலிகளும் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் மற்றும் அது குறித்த குற்றங்கள் குறித்து ஐ.நா. மனித உரிமை ஆணையர் அலுவலகமே விசாரிக்க வேண்டும் என்று தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

    போர்க் குற்றங்கள் குறித்து விசாரணை நடத்தும் பொறுப்பை ஐ.நா. மனித உரிமை ஆணையத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்ற கோரிக்கை ஓரளவு முன்னேற்றமானதுதான் என்றாலும் முழுமையானது அல்ல.

    காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்பதற்காக இலங்கை சென்றபோது, அங்குள்ள தமிழர்களை சந்தித்த இங்கிலாந்து பிரதமர் கேமரூன், இலங்கைப் போர்க்குற்றங்கள் குறித்து சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும், அதற்கான தீர்மானத்தை அமெரிக்காவுடன் இணைந்து இங்கிலாந்து கொண்டு வரும் என்றும் உறுதியளித்திருந்தார்.

    இதை அமெரிக்காவும் உறுதி செய்திருந்தது. இதனால், ஈழத் தமிழர்களுக்கு நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுக்கு ஏற்பட்டிருந்தது. ஆனால் ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் தாக்கல் செய்யப்பட்டிருக்கும் வரைவுத் தீர்மானத்தின் வாசகங்கள் தமிழர்களின் நம்பிக்கையை தக்கவைத்துக் கொள்ளும் வகையில் இல்லை.

    எனவே, நம்பகமான, சுதந்திரமான பன்னாட்டு விசாரணை நடத்துவதன் மூலமே குற்றவாளிகளுக்கு தண்டனையும், ஈழத் தமிழர்களுக்கு நீதியும் வழங்க முடியும்.

    அதனால் ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தாக்கல் செய்துள்ள வரைவுத் தீர்மானத்தில் இதற்கான திருத்தங்களை இந்தியா கொண்டு வர வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai