சுடச்சுட

    

    காங்கிரஸ் அலுவலகம் தாக்குதல் சம்பவம்: 7 பேருக்கு ஜாமீன் மறுப்பு

    By dn  |   Published on : 05th March 2014 01:51 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தமிழக காங்கிரஸ் அலுவலகத்தில் தாக்குதல் நடத்திய தமிழர் முன்னேற்றப் படையைச் சேர்ந்த ஏழு பேரின் ஜாமீன் மனுவை சென்னை முதலாவது கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

    தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் பிப்ரவரி மாதம் 26-ஆம் தேதி தமிழர் முன்னேற்றப் படையைச் சேர்ந்த பலர் தாக்குதல் நடத்தினர். காங்கிரஸாரும் பதிலுக்கு தாக்குதல் நடத்தினர். அதில், இரு தரப்பினருக்கும் காயம் ஏற்பட்டது.

    இந்தச் சம்பவம் தொடர்பாக வீரலட்சமி உள்பட தமிழக முன்னேற்றப் படையைச் சேர்ந்த ஏழுபேரை போலீஸார் கைது செய்தனர். அவர்கள் அனைவரும் ஜாமீன் கோரி மனுத் தாக்கல் செய்தனர். இந்த மனு முதலாவது கூடுதல் செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணமூர்த்தி முன்பு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. இவர்களை விடுவித்தால் விசாரணை பாதிக்கப்படும் என அரசு வழக்குரைஞர் ஜெகன் வாதாடினார். மனுவை விசாரித்த நீதிபதி ஏழு பேரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai