சுடச்சுட

    

    காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் மீது வழக்கு: ஞானதேசிகன் கண்டனம்

    By dn  |   Published on : 05th March 2014 01:56 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    gnadesigan

    கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெற்ற வன்முறை தொடர்பாக காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ஜே.ஜி. பிரின்ஸ் (குளச்சல்), ஜான் ஜேக்கப் (கிள்ளியூர்) உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளதற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் பி.எஸ். ஞானதேசிகன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக செவ்வாய்க்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:

    கன்னியாகுமரி மாவட்டத்தில் ராஜீவ் காந்தி சிலை மற்றும் காஙகிரஸ் கொடிக் கம்பங்கள் உள்ள இடத்தில் பொதுக்கூட்டங்கள் நடத்த நாம் தமிழர் கட்சிக்கு போலீஸார் அனுமதி வழங்கியுள்ளனர்.

    தமிழகத்தில் ஏற்கெனவே பல இடங்களில் ராஜீவ் காந்தி சிலைகள் உடைக்கப்பட்டதால், கன்னியாகுமரியில் ராஜீவ் காந்தி சிலை மற்றும் காங்கிரஸ் கொடிக் கம்பங்களுக்கு பாதுகாப்பாக காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பிரின்ஸ், ஜான் ஜேக்கப் உள்ளிட்டோர் நின்றுகொண்டிருந்தனர்.

    அப்போது காங்கிரஸ் நிர்வாகிகளுடன் நாம் தமிழர் கட்சியினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது சிலர் காங்கிரஸாரைத் தாக்க முற்பட கைகலப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்டோர் மீது போலீஸார் கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

    இதனைக் கண்டித்து தக்கலையில் ஆர்ப்பாட்டம் நடத்திய எம்.எல்.ஏ.க்கள் உள்பட பலரை போலீஸார் கைது செய்துள்ளனர். இது கடும் கண்டனத்துக்குரியது. எந்த ஆர்ப்பாட்டத்திலும் காங்கிரஸ் கட்சியினர் வன்முறையில் ஈடுபடவில்லை என ஞானதேசிகன் தெரிவித்துள்ளார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai