சுடச்சுட

  

  கோயில்கள் வருவாய்: வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்: ராம.கோபாலன்

  By dn  |   Published on : 05th March 2014 04:31 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  ramagopalan

  இந்து சமய அறநிலையத் துறை தனது வருவாய், செலவினம் குறித்த வெள்ளை அறிக்கையை வெளியிட வேண்டும் என, இந்து முன்னணி நிறுவனர் ராம. கோபாலன் வலியுறுத்தியுள்ளார்.

  அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலுக்குச் சொந்தமான பழனியாண்டவர் கல்லூரியில் மாற்று மதத்தினருக்கு பணி நியமனம் செய்ய ஏற்பாடுகள் நடைபெறுவதையும், படிவழிப் பாதையில் உள்ள மாற்று மதத்தினர் கடைகளை, நீதிமன்ற உத்தரவின்பேரில் அகற்றாமல் கால தாமதம் செய்வதையும் கண்டித்து, இந்து முன்னணி மற்றும் பழனி மலை கோயில் பாதுகாப்புப் பேரவை சார்பில் பழனி பேருந்து நிலைய ரவுண்டானா பகுதியில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

  இந்து முன்னணி நிறுவனர் ராம. கோபாலன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு பேசினார். பின்னர், அவர் அளித்த பேட்டி: தமிழகத்தில் உள்ள சுமார் 43 ஆயிரம் கோயில்களுக்கு சொந்தமாக சுமார் 4 லட்சத்து 37 ஆயிரம் ஹெக்டேர் நிலங்கள் உள்ளன. இவை பலரால் ஆக்கிரமிக்கப்பட்டு, திருக்கோயில்களுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது.

  உதாரணமாக, மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு உள்பட்ட கடை ரூ. 500-க்கு வாடகைக்கு விடப்பட்டுள்ள நிலையில், அருகே உள்ள அதே அளவு இடம் தனியாரால் ரூ. 5 ஆயிரத்துக்கு வாடகைக்கு விடப்பட்டுள்ளது. அரசு அதிகாரிகளால் கோயிலுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது.

  தமிழகத்தில் உள்ள கோயில்களுக்கு எந்தந்த இனங்களில் வருவாய் வருகிறது. அது எந்தெந்த இனங்களுக்குச் செலவு செய்யப்படுகிறது என்ற வெள்ளை அறிக்கையை, இந்து சமய அறநிலையத் துறை வெளியிட வேண்டும் என்றார்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai