சுடச்சுட

    

    நாகை மாவட்டம், சீர்காழி புறவழிச் சாலையில் ஆட்டோவும், காரும் செவ்வாய்க்கிழமை நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் சிறுமி உயிரிழந்தார்.

    சீர்காழி தென்பாதி என்.எஸ்.பி. நகரைச் சேர்ந்த க. வளர்மதி (55), இவரது மகள் கீழ்வேளூரைச் சேர்ந்த கோ. மல்லிகா (35), பேத்தி மதுமிதா (7) ஆகியோர் க. சண்முகம் (39) என்பவரது ஆட்டோவில் சீர்காழியிலிருந்து எருக்கூர் பகுதிக்கு சென்று கொண்டிருந்தனர்.

    அப்போது சென்னையிலிருந்து வேளாங்கண்ணிக்கு சென்ற கார் ஆட்டோ மீது மோதியது. இதில் ஆட்டோ ஓட்டுநர் சண்முகம், அதில் பயணம் செய்த வளர்மதி, மல்லிகா, மதுமிதா ஆகியோர் பலத்த காயமடைந்தனர். அவர்களை 108 ஆம்புலன்ஸ் மூலம் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிறுமி மதுமிதா இறந்தார்.

    இந்த நிலையில், ஆட்டோ மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற கார் சீர்காழி புறவழிச் சாலை செங்கமேடு என்ற இடத்தில் டீசல் இல்லாமல் நின்றுவிட்டது. தகவல் அறிந்து அங்கு சென்ற சீர்காழி காவல் உதவி ஆய்வாளர் தமிழ்ச்செல்வி மற்றும் போலீஸார் காரையும், அதில் இருந்த ஒருவரையும் காவல் நிலையம் கொண்டுவந்தனர்.

    விசாரணையில், காரில் வந்தவர் சென்னை அண்ணா நகரைச் சேர்ந்த சின்னத்திரை நடிகர் ஷ்யாம் என்பது தெரியவந்தது.

    இதுகுறித்து வழக்குப் பதிந்த சீர்காழி காவல் துறையினர், காரை ஓட்டிவந்தது யார்? காரில் வேறு யாரேனும் வந்தனரா? விபத்துக்கான காரணம் என்ன என நடிகர் ஷ்யாமிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai