சுடச்சுட

  
  press_club

  மக்களவைத் தேர்தலில் திமுகவை ஆதரிக்கும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம், மனித நேய மக்கள் கட்சி ஆகியவற்றின் முடிவுக்கு அதே இயக்கத்தில் உள்ள ஒரு பிரிவினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

  திருநெல்வேலி உள்பட 20-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் இத்தகைய எதிர்ப்பு முடிவில் உள்ளோரை ஒன்றிணைத்து மாநிலப் பொதுக் குழு கூட்டி, அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்யப்படும் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.

  இதுதொடர்பாக, தமுமுக திருநெல்வேலி மாவட்டத் தலைவராக இருந்த மைதீன் பாரூக், மனித நேய மக்கள் கட்சி மாவட்டச் செயலராக இருந்த ரசூல் மைதீன் ஆகியோர் செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:

  தமுமுக, மமக ஆகியவை தொடங்கப்ட்ட காலத்திலிருந்து இயக்கப் பணி செய்துவரும் நிர்வாகிகள் தமிழகத்தில் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகின்றனர்.

  குறிப்பாக, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, மதுரை, தேனி, திருவள்ளூர், தென் சென்னை, திருப்பூர், கடலூர், நாகை, திருவண்ணாமலை, விழுப்புரம், புதுக்கோட்டை, கரூர், காரைக்கால் ஆகிய மாவட்டங்களில் மாவட்ட நிர்வாகிகள் நீக்கப்பட்டு, பொறுப்புக் குழுவினர் நியமிக்கப்பட்டுள்ளனர். இதேபோல, திருநெல்வேலி மாவட்டத்தில் நாங்கள் நீக்கப்பட்டிருப்பதாக தலைமை அறிவித்துள்ளது.

  பிற கட்சிகளில் இருப்பதைப்போல மாவட்ட நிர்வாகிகள் மாநிலத் தலைமையால் நியமிக்கப்படுதல்ல. மாவட்ட அளவில் பொதுக் குழு கூடி நிர்வாகிகளைத் தேர்வு செய்ய வேண்டும். திருநெல்வேலி மாவட்டத்தில் ஏற்கெனவே உள்ள தமுமுக, மமக நிர்வாகிகளே தொடர்ந்து அமைப்பை நடத்துவர்.

  மாநிலங்களவைத் தேர்தலின்போதே அதிமுக ஆதரவு என்பதைத்தான் மாநில செயற்குழுவில் வலியுறுத்தினோம். முடிவும் எடுக்கப்பட்டது. ஆனால், திமுக வேட்பாளர் கனிமொழிக்கு ஆதரவு தெரிவித்தது தலைமை.

  இப்போதும், மக்களவைத் தேர்தலுக்கு திமுகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. கட்சித் தலைமையின் இந்த விரோதப்போக்கை கண்டித்து, மாநிலம் முழுவதும் அதிருப்தியில் உள்ள மாவட்ட நிர்வாகிகளை ஒன்றுதிரட்டி மாநிலப் பொதுக்குழுவைக் கூட்டி மாநிலத் தலைமையை மாற்றியமைப்போம். அதன் பிறகே மக்களவைத் தேர்தலில் யாரை ஆதரிப்பது என்பதை முடிவு செய்வோம். இன்னும் 10 அல்லது 15 நாள்களில் சென்னையில் மாநிலப் பொதுக்குழு கூடும் என்றனர் அவர்கள்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai