Enable Javscript for better performance
தேன்கனிக்கோட்டை அருகே கிணற்றில் விழுந்த யானை உயிருடன் மீட்பு- Dinamani

சுடச்சுட

    

    தேன்கனிக்கோட்டை அருகே கிணற்றில் விழுந்த யானை உயிருடன் மீட்பு

    By dn  |   Published on : 05th March 2014 11:20 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கிருஷ்ணகிரி மாவட்டம், தென்கனிக்கோட்டை அருகே கிணற்றில் விழுந்த யானையை வனத் துறையினர் உயிருடன் மீட்டனர்.

    தேன்கனிக்கோட்டை அருகேயுள்ள குந்துகோட்டை ஈருசெட்டி ஏரியையொட்டி, 30 அடி ஆழமுள்ள விவசாயக் கிணறு உள்ளது. இந்தக் கிணற்றில் செவ்வாய்க்கிழமை இரவு விழுந்து தண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருந்த 6 வயதான ஆண் யானையின் பிளிறல் சத்தம் அந்தப் பகுதியில் கேட்டது.இதுகுறித்து வனத் துறையினருக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு மாவட்ட வன அலுவலர் உலகநாதன் தலைமையில் உதவி வனப் பாதுகாவலர் செளந்தரராஜன், அஞ்செட்டி வனச்சரகர் அருணாசலம், வனவர் ராஜேந்திரன், லோகநாதன், வனக் காப்பாளர் ராம்குமார் உள்ளிட்டோர் விரைந்து வந்தனர்.

    இதையடுத்து, பொக்லைன் இயந்திரத்தின் உதவியுடன் கிணற்றில் யானை வெளியேறுவதற்கு வசதியாக பாதை அமைக்கப்பட்டது. சுமார் 5 மணி நேரத்திற்குப் பிறகு புதன்கிழமை அதிகாலை 3.30 மணியளவில் கிணற்றைவிட்டு யானை வெளியேறி, வனப் பகுதியை நோக்கி ஓடியது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai