Enable Javscript for better performance
\\\"தொகுதி ஒதுக்கீடு: பேச்சுவார்த்தை சுமுகமாக முடியும்\\\'- Dinamani

சுடச்சுட

    
    nallakannu

    அதிமுகவுடன் நடைபெற்று வரும் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை சுமுகமாக முடியும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய நிர்வாகக் குழு உறுப்பினர் ஆர்.நல்லகண்ணு நம்பிக்கை தெரிவித்தார்.

    ஸ்ரீவில்லிபுத்தூருக்கு செவ்வாய்க்கிழமை வந்த அவர், செய்தியாளர்களிடம் கூறியதாவது:

    பாரதிய ஜனதா கட்சியும், காங்கிரஸ் கட்சியும் பொருளாதாரக் கொள்கையில் நாணயத்தின் இரு பக்கங்களைப் போல செயல்படுகின்றன.

    காங்கிரஸ் முதலாளித்துவக் கட்சி. தவறான பொருளாதாரக் கொள்கையால் காங்கிரஸ் நாட்டைச் சீரழித்துவிட்டது. பாரதிய ஜனதா மதவாத கட்சி. குஜராத் சம்பவத்தை மக்கள் மறக்க மாட்டார்கள்.

    அப்போதைய பிரதமர் வாஜ்பாய் குஜராத் சம்பவத்தை ராஜதர்மமான நடைமுறை இல்லை என்று கூறினார்.

    2013-ம் ஆண்டு முதல் இன்று வரை மத்திய காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் 16 முறை பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

    மோடி, ராகுல் என்ற தனிநபர்களை நம்பி நாட்டை ஒப்படைக்க இயலாது. இது ஜனநாயக நாடு. நாட்டில் 120 கோடி மக்கள் உள்ளனர். அவர்கள் மக்களவை உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பார்கள். அந்த உறுப்பினர்கள்தான் பிரதமரைத் தேர்வு செய்யும் அதிகாரம் படைத்தவர்கள். அ.தி.மு.க. கூட்டணியில் நாங்கள் கேட்ட இடங்கள் தருவதாகக் கூறியுள்ளார்கள். இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் தலா 4 இடங்களைக் கேட்டுள்ளோம். தொடர்ந்து பேச்சு வார்த்தை நடைபெற்றுவருகிறது. அது சுமூகமாக முடியும்.

    மதவெறி கட்சி மற்றும் பன்னாட்டு முதலாளிகளுக்கு ஆதரவான பொருளாதாரக் கொள்கையுடைய கட்சிக்கு எதிராக மூன்றாவது அணி அமைத்து போட்டியிடுகிறோம். இக் கூட்டணி மகத்தான வெற்றிபெற்று நாட்டை அமைதியான, வளமான, வளர்ச்சிப் பாதையில் வழிநடத்திச் செல்லும் என்றார் அவர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai