சுடச்சுட

    

    தொட்டபெட்டாவில் அனுமதியின்றி விடுதி: 2 வாரத்துக்குள் இடிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

    By dn  |   Published on : 05th March 2014 01:23 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நீலகிரி மாவட்டம் தொட்டபெட்டா பஞ்சாயத்துக்குட்பட்ட இடத்தில் அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டடத்தை இடிப்பதற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    நீலகிரி சுற்றுச்சூழல் மற்றும் பாதுகாப்பு சமிதியின் தலைவர் பி.கண்ணபிரான் உயர்நீதிமன்றத்தில் கடந்த 2011-ஆம் ஆண்டு ஒரு மனு தாக்கல் செய்தார்.

    அதில், "தொட்டபெட்டா பஞ்சாயத்துக்குட்பட்ட இடத்தில் தேவராஜ் என்பவர் விடுதி கட்டுகிறார். அதற்கு தடை விதிக்க வேண்டும்' என மனுவில் கோரப்பட்டது.

    இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க அப்போதைய நீலகிரி மாவட்ட ஆட்சியர் அர்ச்சனா பட்நாயக்குக்கு கடந்த 2011-ஆம் ஆண்டு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை நீலகிரி மாவட்ட ஆட்சியர் பின்பற்றவில்லை எனக் கூறி பி.கண்ணபிரான் கடந்த 2012-ஆம் ஆண்டு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்தார்.

    இதை விசாரித்த நீதிமன்றம் கடந்த அக்டோபர் 29-ஆம் தேதி தற்போதைய கோவை மாவட்ட ஆட்சியராக உள்ள அர்ச்சனா பட்நாயக்கை நேரில் ஆஜராக உத்தரவிட்டது.

    அதன் பிறகு விசாரணையின் போதும் கண்டிப்பாக அவர் ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டது. கடந்த முறை விசாரணையின் போது கட்டடத்தை இடிப்பதற்கு கால அவகாசம் வழங்க வேண்டும் என கட்டட உரிமையாளர் கோரினார்.

    இந்த நிலையில் இந்த வழக்கு தலைமை நீதிபதி (பொறுப்பு) சதீஷ் கே.அக்னிஹோத்ரி, நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. விசாரணையைத் தொடர்ந்து "அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டடத்தை இடித்துவிட்டு, அதன் அறிக்கையை நீலகிரி மாவட்ட ஆட்சியர் மற்றும் கட்டட உரிமையாளர் அடுத்த இரண்டு வாரத்துக்குள் தாக்கல் செய்ய வேண்டும்' என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai