சுடச்சுட

  
  lady_bjp

  பாஜக கூட்டணியில் இடம்பெறும் கட்சிகள் குறித்து புதன்கிழமை தமிழக பாஜக தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் அறிவிப்பார் என அக்கட்சியின் மாநிலப் பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன் தெரிவித்தார்.

  "சென்னை தேனாம்பேட்டை எல்டாம்ஸ் சாலையில் உள்ள ஸ்ரீசுப்பிரமணியர் கோயில் அருகில் இந்த "ஒரு நோட்டு, தாமரைக்கு ஒரு ஓட்டு' என்ற பிரசார இயக்கத்தை வானதி சீனிவாசன் செவ்வாய்க்கிழமை தொடங்கினார். அந்தப் பகுதிகளில் வீடு வீடாகச் சென்ற அவர், பாஜகவுக்கு வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டதோடு, மக்களிடம் இருந்து நன்கொடையும் பெற்றார்.

  பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வானதி சீனிவாசன், பாஜக சார்பில் தேமுதிக, பாமக ஆகிய கட்சிகளுடன் பேச்சுவார்த்தை சுமுகமாக நடந்து வருகிறது. கூட்டணி குறித்து பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் புதன்கிழமை மாலை 3 மணிக்கு நடைபெறும் செய்தியாளர்கள் சந்திப்பில் மாநிலத் தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் அறிவிக்க இருக்கிறார் என்றார்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai