சுடச்சுட

    

    பாம்பன் நாட்டுப்படகு மீனவர்கள் வேலைநிறுத்தத்தை வாபஸ் பெற்று செவ்வாய்க்கிழமை கடலுக்குச் சென்றனர். தமிழக கடலோரப் பகுதிகளில் அரசால் தடை செய்யப்பட்ட இரட்டைமடி, சுருக்குமடி வலைகளைப் பயன்படுத்தி சில விசைப்படகு மீனவர்கள் மீன்பிடித்து வருகின்றனர். இதனால் நாட்டுப்படகு மீனவர்களுக்கு மீன்கள் கிடைக்காமல் அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது. தடை செய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்தும் மீனவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாம்பன் நாட்டுப் படகு மீனவர்கள் கடந்த மூன்று மாதங்களாக பல்வேறு போராட்டங்களை நடத்தினர்.

    பிப்ரவரி 20 முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். மேலும், திங்கள்கிழமை ராமேசுவரம் மீன்வளத் துறை அலுவலகம் முன் மீன்பிடி வலைகளையும், படகு உரிமச் சான்றிதழ்களையும் ஒப்படைத்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதைத் தொடர்ந்து, மீன்வளத் துறை உதவி இயக்குநர் மீனவர் சங்க பிரதிநிதிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். தடை செய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்திய வர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனர். இதனால் மீனவர்கள் வேலை நிறுத்தத்தை வாபஸ் பெற்று செவ்வாய்க்கிழமை முதல் மீன் பிடிக்க கடலுக்குச் சென்றனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai