சுடச்சுட

    

    புதுக்கோட்டை மீனவர்கள் 32 பேர் இலங்கை கடற்படையால் சிறைபிடிப்பு

    By dn  |   Published on : 05th March 2014 01:50 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    hut

    புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 32 மீனவர்களையும், 8 விசைப்படகுகளையும் இலங்கை கடற்படையினர் திங்கள்கிழமை இரவு சிறைபிடித்துச் சென்றனர்.

    புதுக்கோட்டை மாவட்டம், ஜெகதாப்பட்டினம் மீன்பிடித்தளத்தில் இருந்து 243 விசைப்படகுகளில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் திங்கள்கிழமை கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்.

    இவர்கள் அனைவரும் நடுக்கடலில் நெடுந்தீவு அருகே இரவில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களின் 8 விசைப்படகுகளையும் சுற்றி வளைத்து, மீனவர்கள் 32 பேரை சிறைபிடித்தனர். மேலும், மீனவர்களையும், விசைப்படகுகளையும் இலங்கைக்கு கொண்டு சென்றனர்.

    இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் விவரம்:

    வைரக்கண்ணு என்பவருக்குச் சொந்தமான விசைப்படகில் சென்ற வைரக்கண்ணு மகன் கணேசன் (45), அஞ்சப்பன் மகன் சின்னையன் (50), குஞ்சுபாபு மகன் சம்தீசன் (55), மாரிமுத்து மகன் கண்ணப்பன் (60).

    பெருமாள் என்பவருக்குச் சொந்தமான விசைப்படகில் சென்ற பெருமாள் மகன்கள் முகிலன் (18), பிரசாத் (25), விக்னேஷ் (23), கோவிந்தராஜ் மகன் ஜெயபால் (50), இருளாண்டி மகன் சன்னியாசி (40).

    அஞ்சப்பன் என்பவருக்குச் சொந்தமான விசைப்படகில் சென்ற அஞ்சப்பன் மகன்கள் வீரகுமார் (23), வீரதாஸ் (26), ஆண்டி மகன் சுப்பையா (50), ராஜேந்திரன் மகன் விவேக் (19).

    செல்லாச்சி என்பவருக்குச் சொந்தமான விசைப்படகில் சென்ற பள்ளிகொண்டான் மகன் சிவபெருமாள் (55), ஆறுமுகம் மகன் முருகன் (55), தங்கராஜ் மகன் மாரியப்பன் (35), செங்காநன்னி மகன் பாபு (27).

    கமலநாதன் என்பவருக்குச் சொந்தமான விசைப்படகில் சென்ற சாமிநாதன் மகன் பாபு (40), ஆறுமுகம் மகன் இடும்பன் (60), சிங்காரவேல் மகன் பாண்டி (30), சித்திரைச்சாமி மகன் சக்தி (25).

    வளர்செல்வம் என்பவருக்குச் சொந்தமான படகில் சென்ற தங்கவேல் மகன் பழனியாண்டி (55), பழனியாண்டி மகன்கள் கமலநாதன் (30), பார்த்திபன் (23), முத்து மகன் பிரபாகரன் (19).

    செல்வநாதன் என்பவருக்குச் சொந்தமான விசைப்படகில் சென்ற பஞ்சவர்ணம் (60), பஞ்சவர்ணம் மகன் தமிழ்ச்செல்வன் (29), பக்கிரிசாமி மகன் பிரகாஷ் (26), கனகசபை மகன் செந்தில் (32).

    பெருமாள் மகன் ராஜா என்பவருக்குச் சொந்தமான விசைப்படகில் சென்ற ஆறுமுகம் மகன் சதீஷ் (19), பாலமுரளி மகன் ஆறுமுகம் (40), சிவபெருமாள் மகன் ஸ்ரீராம் (19) ஆகிய 32 பேரையும், அவர்கள் சென்ற 8 விசைப்படகுகளையும் இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து, இலங்கை காங்கேசன் துறைமுகத்துக்கு கொண்டு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai