சுடச்சுட

  

  கன்னியாகுமரி மாவட்டம், சாமிதோப்பு அருகே செவ்வாய்க்கிழமை ரயில் மோதியதில், பள்ளி மாணவி உள்பட 2 பேர் உயிரிழந்தனர்.

  சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் நடைபெற்ற அவதார தினவிழாவில் பங்கேற்றுவிட்டு, பிற்பகல் 3 மணிக்கு வடக்குத்தாமரைகுளம் ரயில்பாதை வழியாக ஏராளமான பக்தர்கள் சொந்த ஊருக்குச் சென்று கொண்டிருந்தனர்.

  அப்போது ரயில்பாதையை கடக்க முயன்ற, குமரி மாவட்டம் ஈத்தாமொழியை அடுத்த காற்றாடிதட்டு ஊரைச் சேர்ந்த பஞ்சவர்ணம் (45), இலந்தையடித்தட்டு அய்யப்பன் மகளான 3-ஆம் வகுப்பு மாணவி அனுஷா (8), அதே ஊரைச் சேர்ந்த ராஜா மகள் புவனேஸ்வரி (11) ஆகிய மூவர் மீதும் கொல்லத்தில் இருந்து கன்னியாகுமரி நோக்கிச் சென்ற பயணிகள் ரயில் மோதியது.

  இதில் பஞ்சவர்ணம், அனுஷா ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே இறந்தனர். பலத்த காயமடைந்த புவனேஸ்வரி ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.

  சம்பவம் குறித்து நாகர்கோவில் ரயில்வே போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai