சுடச்சுட

  

  அதிமுகவில் 40 தொகுதிகளுக்கும் தேர்தல் பணிக்குழு அறிவிப்பு

  By dn  |   Published on : 06th March 2014 02:27 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  aiadmk_party

  புதுச்சேரி உள்பட 40 தொகுதிகளுக்கும் தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களை அதிமுக பொதுச்செயலாளரும் முதல்வருமான ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

  வரும் ஏப்ரல் 24-ஆம் தேதி புதுச்சேரி உள்பட 40 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெறவுள்ளது. 40 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்துள்ள ஜெயலலிதா, மார்ச் 3-ஆம் தேதி முதல் தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்.

  இந்நிலையில் 40 தொகுதிகளுக்கும் தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களை முதல்வர் ஜெயலலிதா புதன்கிழமை அறிவித்தார்.

  முன்னாள் அமைச்சர்கள் கே.ஏ. செங்கோட்டையன், ராஜ கண்ணப்பன், செம்மலை, பொன்னையன் ஆகியோருக்கு தேர்தல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

  அதன் விவரம்:

  திருவள்ளூர் (தனி) - அமைச்சர் பி.வி. ரமணா, எம்.எல்.ஏ. ஜே.சி.டி. பிரபாகர் , வட சென்னை - இ. மதுசூதனன், அமைச்சர் மாதவரம் மூர்த்தி, சட்டப்பேரவை முன்னாள் தலைவர் டி. ஜெயக்குமார்.

  தென் சென்னை - அமைச்சர் பா. வளர்மதி, ஆதிராஜாராம், எம்.எல்.ஏ.க்கள் ஆர். ராஜலட்சுமி, வி.பி. கலைராஜன், சரஸ்வதி ரெங்கசாமி, விருகை வி.என். ரவி. மத்திய சென்னை - அமைச்சர் எஸ். அப்துல் ரகீம், எம்.எல்.ஏ. கோகுல இந்திரா, நா. பாலகங்கா எம்.பி, சென்னை மேயர் சைதை துரைசாமி.

  ஸ்ரீபெரும்புதூர் - அமைச்சர் டி.கே.எம். சின்னையா, வி. அலெக்சாண்டர், சி.ஆர். சரஸ்வதி, கே. கவிதா. காஞ்சிபுரம் (தனி) - டாக்டர் வா. மைத்ரேயன் எம்.பி, வாலாஜாபாத் கணேசன், சிட்லப்பாக்கம் ராஜேந்திரன், வி. சோமசுந்தரம் எம்.எல்.ஏ.

  அரக்கோணம் - சி. பொன்னையன், சுமைதாங்கி ஏழுமலை, பி.எம். நரசிம்மன். வேலூர் - அமைச்சர் கே.சி. வீரமணி, கே.ஏ.கே. முகில், கே.எம். கலைச்செல்வி. கிருஷ்ணகிரி - அமைச்சர் கே.பி. முனுசாமி, புரசை கோ. செல்வம்.

  தருமபுரி - அமைச்சர் பி. பழனியப்பன், கே.பி. அன்பழகன் எம்.எல்.ஏ. திருவண்ணாமலை - வி.எஸ். சேதுராமன், ஆர். கமலக்கண்ணன், அக்ரி எஸ்.எஸ். கிருஷ்ணமூர்த்தி எம்.எல்.ஏ.

  ஆரணி - அமைச்சர் முக்கூர் என். சுப்பிரமணியன், தாடி ம. ராசு, டி. சகுந்தலா.

  விழுப்புரம் (தனி) - வெ. சரோஜா, சி.வி. சண்முகம் எம்.எல்.ஏ, ஆர்.லட்சுமணன் எம்.பி. கள்ளக்குறிச்சி - அமைச்சர் ப. மோகன், வரகூர் ஆ. அருணாச்சலம். சேலம் - அமைச்சர் எடப்பாடி கே. பழனிச்சாமி, எம்.கே. செல்வராஜூ. நாமக்கல் - அமைச்சர் பி. தங்கமணி, என். சதன்பிரபாகர்.

  ஈரோடு - அமைச்சர் செ. தாமோதரன், ஆர்.என். கிட்டுசாமி எம்.எல்.ஏ, செவ்வை மு. சம்பத்குமார், ஜி. பழனிவேல். திருப்பூர் - அமைச்சர்கள் எம்.எஸ்.எம். ஆனந்தன், தோப்பு வெங்கடாச்சலம், திருப்பூர் மேயர் ஏ. விசாலாட்சி.

  நீலகிரி (தனி) - அமைச்சர் எம்.எஸ்.எம். ஆனந்தன், ஏ.கே. செல்வராஜ், அ. மில்லர், எஸ். கலைச்செல்வன், கே.ஆர்.அர்ஜுனன். கோவை - ஆர். சின்னச்சாமி, கோவை மேயர் செ.ம. வேலுச்சாமி, சி.எம். விஷ்ணுபிரபு. பொள்ளாச்சி - பொள்ளாச்சி ஜெயராமன், எஸ்.பி. வேலுமணி, கே. ராதாகிருஷ்ணன்.

  திண்டுக்கல் - அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், சோலை இரா. கண்ணன். கரூர் - அமைச்சர் செந்தில் பாலாஜி, ஆர்.எஸ். முத்துசாமி. திருச்சி - அமைச்சர்கள் ந. சுப்பிரமணியன், விஜயபாஸ்கர், ஆர். மனோகரன்.

  பெரம்பலூர் - அமைச்சர் டி.பி. பூனாட்சி, டி. ரத்தினவேல் எம்.பி, மா. ரவிச்சந்திரன், என்.ஆர். சிவபதி எம்.எல்.ஏ. கடலூர் - அமைச்சர் எம்.சி. சம்பத், சொரத்தூர் ராஜேந்திரன் எம்.எல்.ஏ, எஸ். அப்துல் ஹமீது.

  சிதம்பரம் (தனி) - கே.கே. கலைமணி, அமைச்சர் ஆர். வைத்திலிங்கம், கே.ஏ. செங்கோட்டையன். மயிலாடுதுறை - அமைச்சர் கே.ஏ. ஜெயபால், எம். ரெங்கசாமி எம்.எல்.ஏ.

  நாகப்பட்டினம் (தனி) - அமைச்சர் காமராஜ், கு. தங்கமுத்து. தஞ்சாவூர் - அமைச்சர் வைத்திலிங்கம், துரை. கோவிந்தராஜன்.

  சிவகங்கை - அமைச்சர்கள் விஜயபாஸ்கர், ஆர்.பி. உதயகுமார். மதுரை - அமைச்சர் செல்லூர் கே. ராஜூ, எம்.எஸ். பாண்டியன், ம. முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ, மதுரை மேயர் வி.வி. ராஜன்செல்லப்பா.

  தேனி - அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், க. தவசி, டி.டி. சிவகுமார்.

  விருதுநகர் - அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி, சக்தி கோதண்டம்.

  ராமநாதபுரம் - அமைச்சர் எஸ். சுந்தரராஜ், எம்.ஏ. முனுசாமி, ஆர்.எஸ். ராஜகண்ணப்பன்.

  தூத்துக்குடி - ஜெனிபர் சந்திரன், எல். சசிகலா புஷ்பம், அமைச்சர் எஸ்.பி. சண்முகநாதன். தென்காசி (தனி) - அமைச்சர் செந்தூர்பாண்டியன், பி.எச். மனோஜ் பாண்டியன், எஸ். நாகூர் மீரான், நயினார் நாகேந்திரன்.

  திருநெல்வேலி - பி.எச். பாண்டியன், முருகையா பாண்டியன், எஸ். முத்துக்கருப்பன்.

  கன்னியாகுமரி - அமைச்சர் கே.டி. பச்சைமால், தமிழ்மகன் உசேன், ஜஸ்டின் செல்வராஜ், நாஞ்சில் சம்பத், சிவசெல்வராஜன், தளவாய்சுந்தரம்.

  புதுச்சேரி - செ. செம்மலை, அமைச்சர்கள் ஆர். காமராஜ், எம்.சி. சம்பத், ஏ. அன்பழகன், ஓம்சக்தி சேகர்.

  இவர்களோடு கட்சியின் நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் அவர்களது தொகுதிகளில் தேர்தல் பணியாற்ற வேண்டும். தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களுக்கு கட்சியினர் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என ஜெயலலிதா கேட்டுக் கொண்டுள்ளார்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai