சுடச்சுட

    

    ஆங்கிலம் முதல் தாளில் காப்பியடித்த 14 மாணவர்கள் சிக்கினர்

    By dn  |   Published on : 06th March 2014 11:13 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பிளஸ் 2 ஆங்கிலம் முதல் தாளில் காப்பியடித்ததாக 14 மாணவர்கள் வியாழக்கிழமை (மார்ச் 6) பிடிபட்டனர்.

    ஆங்கிலம் முதல் தாளில் திருவண்ணாமலை மாவட்டத்தில் அதிகபட்சமாக 4 மாணவர்களும், அரியலூரில் 3 மாணவர்களும், புதுக்கோட்டையில் 2 மாணவர்களும், மதுரை, ராமநாதபுரம், கரூர், காஞ்சிபுரம், சென்னையில் தலா ஒரு மாணவரும் காப்பியடித்ததாக பிடிபட்டனர்.

    கிராமப்புற மாணவர்களுக்கு கடினம்: ஆங்கிலம் முதல் தாள் தேர்வு வினாத்தாள் கிராமப்புற மாணவர்களுக்கு சற்று கடினமாக இருந்ததாக ஆசிரியர்கள் தெரிவித்தனர். கேள்வி எண் 34 முதல் 38 வரையிலும், 44 முதல் 48 வரையிலும் உள்ள இரு மதிப்பெண் வினாக்கள் நேரடியாக இல்லாததால் மாணவர்கள் சிரமப்பட்டதாக அவர்கள் தெரிவித்தனர்.

    டோஃபெல் (பஞஉஊக) என்பதற்கான விளக்கம் போன்ற பல புதுமையான கேள்விகள் இந்த ஆண்டு இடம்பெற்றிருந்தன.

    அதேநேரத்தில், நகர்ப்புற மாணவர்கள் முதல் தாள் வினாத்தாள் எளிமையாக இருந்ததாகக் கூறினார். புத்தகத்தை முழுமையாகப் படித்திருந்தாலே அனைத்துக் கேள்விகளுக்கும் விடை எழுதலாம் என அவர்கள் தெரிவித்தனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai