சுடச்சுட

  

  இலங்கைக்கு எதிராக ஐ.நா.வில் இந்தியா தீர்மானம்: கருணாநிதி வலியுறுத்தல்

  By dn  |   Published on : 06th March 2014 01:09 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  karunanidhi (3)

  இலங்கைக்கு எதிராக ஐ.நா.வில் இந்தியா தீர்மானம் கொண்டு வர வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

  இது தொடர்பாக புதன்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:

  இலங்கைக்கு எதிராக ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கொண்டு வரும் தீர்மானம், ஈழத் தமிழர் பிரச்னைக்கு பெருமளவு தீர்வு காண்பதாக அமையும் என்று உலகத் தமிழர்கள் எதிர்பார்த்தனர்.

  ஆனால், அமெரிக்கா கொண்டு வந்துள்ள வரைவு தீர்மானம் பெருத்த ஏமாற்றத்தையே தந்துள்ளது.

  எனவே, இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள், போர்க் குற்றங்கள், இனப் படுகொலை ஆகியவை குறித்து சுதந்திரமான, நம்பகத்தன்மை வாய்ந்த, சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் என்று இந்தியாவே தனியாகத் தீர்மானம் கொண்டு வர வேண்டும்.

  ஈழத் தமிழர்கள் தங்களுக்குத் தேவையான அரசியல் தீர்வை, அவர்களே தேர்ந்தெடுத்துக் கொள்ளும்வண்ணம் ஐ.நா. மேற்பார்வையில் பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்றும் அந்தத் தீர்மானத்தில் வலியுறுத்த வேண்டும் என்று கருணாநிதி கூறியுள்ளார்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai