சுடச்சுட

    

    சாவு எண்ணிக்கை 4 ஆக உயர்வு: பட்டாசு ஆலைக்கு மாவட்ட நிர்வாகம் சீல்

    By dn  |   Published on : 06th March 2014 03:21 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    காஞ்சிபுரம் அருகே வையாவூரில் நடந்த பட்டாசு ஆலை வெடி விபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்தது. மேலும் அந்த ஆலையை மாவட்ட நிர்வாகம் சீல் வைத்தது.

    காஞ்சிபுரம் அருகே வையாவூர் ஊராட்சி ஒழையூர் சாலையில் சந்திரன் மகன் செந்தில்நாதன் நடத்தி வரும் பட்டாசு ஆலையில் செவ்வாய்க்கிழமை திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த வெடிவிபத்தில் பலத்த காயமடைந்த வையாவூரைச் சேர்ந்த திருஞானத்தின் மனைவி மனோன்மணி (38), பட்டாசு ஆலை இரவுக் காவலாளி முனுசாமியின் மகன் தணிகைமலை (30) ஆகியோர் திங்கள்கிழமை இரவு 10.30 மணி அளவில் இறந்தனர். இவர்களைத் தொடர்ந்து காஞ்சிபுரம் சர்வதீர்த்தகுளம் மேல்கரை பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன், வையாவூரைச் சேர்ந்த மணிமேகலை (40) ஆகியோரும் இறந்தனர். இதனால் பட்டாசு ஆலை வெடி விபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்தது. மனோன்மணிக்கு பாரதி, மகேஸ்வரி ஆகிய 2 மகள்கள் உள்ளனர்.தணிகைமலைக்கு கடந்த 8 மாதங்களுக்கு முன்புதான் திருமணம் ஆனது.

    அவரது மனைவி சுமதி இப்போது 6 மாத கர்ப்பிணியாக உள்ளார்.

    வெங்கடேனுக்கு மீனட்சி என்ற மனைவியும், விஷ்ணு என்ற மகனும், திவ்யா என்ற மகளும் உள்ளனர்.

    காயமடைந்த மற்ற 5 பேர் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    மத்திய வெடிபொருள் கட்டுப்பாட்டு அலுவலர்கள் சோதனை: வெடிவிபத்து நடந்த வையாவூர் பட்டாசு ஆலைக்கு புதன்கிழமை மத்திய பெட்ரோலியம் மற்றும் வெடிபொருள் ஆய்வுத் துறையில் இருந்து தலைமை வெடிபொருள் கட்டுப்பாட்டு அலுவலர் சுந்தரேசன், வெடி மருந்துக் கட்டுப்பாட்டு அலுவலர் சண்முகம் ஆகியோர் வந்தனர்.

    1 மணி நேரத்துக்கு மேலாக பட்டாசு ஆலையில் தடயங்களை சேகரித்தனர். வெடித்து சிதறிய பட்டாசுகளின் மாதிரிகள், வேதி பொருள்களின் மாதிரிகளை சோதனைக்காக சேகரித்தனர்.

    இது குறித்து சுந்தரேசன் கூறியது: வெடி விபத்து ஏற்பட்ட பட்டாசு ஆலையில் மாதிரிகளை சென்னைக்கு கொண்டு சென்று ஆய்வுக்கு உட்படுத்த உள்ளோம். நிர்ணயிக்கப்பட்ட அளவில் வேதிப் பொருள்களின் கலவை உள்ளதா? அனுமதிக்கப்பட்ட வேதி பொருள்தான் பயன்படுத்தப்பட்டுள்ளதா? என்பது குறித்து ஆய்வில் தெரியவரும்.

    இது குறித்த அறிக்கையை தில்லிக்கு அனுப்புவோம். அங்கிருந்து மாவட்ட நிர்வாகத்துக்கு அனுப்பப்படும் என்றார்.

    ஆலைக்கு சீல்: வெடிவிபத்து நடந்த இடத்தில் காஞ்சிபுரம் டி.எஸ்.பி. பாலச்சந்திரன், ஸ்ரீபெரும்புதூர் எஸ்.பி. கண்ணன், இன்ஸ்பெக்டர்கள் பிரபாகர், மாதவன் உள்ளிட்ட போலீஸார் புதன்கிழமை தீவிர ஆய்வில் ஈடுபட்டனர். மேலும் சம்பவ இடத்தில் உள்ள தடயங்களை சேகரித்தனர். இதற்கிடையில் வெடிவிபத்து ஏற்பட்ட ஆலையை சீல் வைக்க காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது.

    இந்த உத்தரவின்பேரில் காஞ்சிபுரம் வட்டாட்சியர் பானு ஆலைக்குச் சென்றார். அங்கு போலீஸார் தடயங்கள் சேகரித்து முடியும் வரை காத்திருந்தார். போலீஸாரின் பணி முடிந்தவுடன் ஆலைக்கு சீல் வைத்தார்.

    டிஆர்ஓ தலைமையில் விசாரணை

    பட்டாசு ஆலை விபத்து குறித்து காஞ்சிபுரம் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் விசாரணை நடைபெறும் என்று ஆட்சியர் கா. பாஸ்கரன் அறிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: இந்த வழக்கில் செந்தில்நாதன் மீது வழக்குப் பதிவு செய்து காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.மேலும் ஆலைக்கு சீல் வைத்து, அவருக்கு வழங்கப்பட்ட உரிமத்தை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    மேற்படி விபத்து தொடர்பாக வெடிவிபத்து ஏற்படுத்துதல் தொடர்பான சட்டப்பிரிவின்கீழ் காஞ்சிபுரம் மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் கூடுதல் மாவட்ட நீதிபதி மூலம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai