செந்துறை அருகே சிவன் கோயிலில் 2 வெண்கல சிலைகள் திருட்டு
By dn | Published on : 06th March 2014 04:13 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

அரியலூர் மாவட்டம், செந்துறை அருகேயுள்ள சிவன் கோயிலில் 2 வெண்கலச் சிலைகள் திருட்டுப் போனது செவ்வாய்க்கிழமை தெரியவந்தது.
செந்துறை அருகே உள்ள தாமரைப்பூண்டி கிராமத்தில் தர்மாம்பிகை உடனுறை தர்மலிங்கேஸ்வரர் கோயில் உள்ளது. இந்தக் கோயிலை அர்ச்சகர் குருசாமி செவ்வாய்க்கிழமை காலை திறக்க வந்த போது, கோயிலின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பது கண்டு காவல் துறைக்கு தகவல் தெரிவித்தார்.
இதன்பேரில், அரியலூர் துணைக் காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீதரன், செந்துறை காவல் நிலைய ஆய்வாளர் பாலாஜி, குவாகம் போலீஸார் அங்கு சென்று பார்வையிட்டனர். அப்போது, கோயிலில் இருந்த நடராஜர், சிவகாமி அம்பாள் வெண்கலச் சிலைகள் திருட்டுப் போனது தெரிய வந்தது. இதன் மதிப்பு ரூ. 25 ஆயிரம். திருட்டு குறித்து துப்பறிய தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். மேலும், போலீஸ் மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டது. குவாகம் காவல் நிலையத்தினர் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.