Enable Javscript for better performance
ஜாதி மோதலை தூண்டும் வகையில் பேசியதாக காடுவெட்டி குரு, திருமாவளவன் மீது வழக்கு- Dinamani

சுடச்சுட

    

    ஜாதி மோதலை தூண்டும் வகையில் பேசியதாக காடுவெட்டி குரு, திருமாவளவன் மீது வழக்கு

    By dn  |   Published on : 06th March 2014 03:25 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    புதுவையில் அண்மையில் நடைபெற்ற பொதுக் கூட்டங்களில் ஜாதி மோதலைத் தூண்டும் வகையில் பேசியதாக காடுவெட்டி குரு, தொல்.திருமாவளவன் ஆகியோர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

    புதுவையில் ஜனவரி 8ஆம் தேதி வெங்கடசுப்பா ரெட்டியார் சதுக்கம் அருகே விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் அம்பேத்கர் சிலைகள் அவமதிப்புத் தொடர்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் பேசினார்.

    அப்போது, புதுவை மக்களிடையே ஜாதிய மோதல், வன்முறையைத் தூண்டும் விதமாக பேசியதாக திருமாவளவன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, பாமக மாவட்டச் செயலர் மதியழகன் உருளையன்பேட்டை போலீஸில் புகார் அளித்தார்.

    அதன் பேரில், திருமாவளவன் மீது ஜாதிக் கலவரத்தைத் தூண்டுதல், உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் புதுவை உருளையன்பேட்டை போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

    குரு மீது வழக்கு: புதுவை-கடலூர் சாலையில் கடந்த ஜனவரி 21ஆம் தேதி நடைபெற்ற வன்னியர் சங்கப் பொதுக் கூட்டத்தில், சங்கத் தலைவர் காடுவெட்டி குரு, புதுவை மாநில பாமக செயலர் அனந்தராமன் ஆகியோர் பேசினர்.

    அப்போது, ஜாதி மோதலைத் தூண்டும் விதத்திலும், திருமாவளவன் குறித்து அவதூறாகவும் பேசியதாக, அனந்தராமன், குரு ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர், மாநில அமைப்பாளர் பாவாணன் தலைமையில், காவல்துறை இயக்குநர் காமராஜிடம் புகார் கொடுத்தனர்.

    இதுகுறித்து ஆய்வு செய்த புதுவை காவல் துறையினர், இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai