சுடச்சுட

  

  தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால் தலைமைச் செயலகத்தில் செய்தி மற்றும் விளம்பரத் துறையில் வைக்கப்பட்டிருந்த புகைப்படக் கண்காட்சி உள்ளிட்ட விளம்பரங்கள் புதன்கிழமை அகற்றப்பட்டன.

  இந்தியா முழுவதும் மக்களவைத் தேர்தலுக்கான அட்டவணையை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் வரும் ஏப்ரல் 24-ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. எனவே, தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்தன.

  தலைமைச் செயலகத்தில் செய்தி மற்றும் விளம்பரத் துறையில் முதல்வர் மற்றும் அமைச்சர்கள் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகள் உள்ளிட்ட முக்கிய நிகழ்ச்சிகளின் புகைப்படங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.

  இந்தப் புகைப்படங்கள் அனைத்தும் புதன்கிழமை மதியம் அகற்றப்பட்டு, தேர்தல் ஆணையத்தின் விளம்பரங்கள் வைக்கப்பட்டன. அதுபோல முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளை முன்னிட்டு தலைமைச் செயலக வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த டிஜிட்டல் பேனர்களும் அகற்றப்பட்டன.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai