சுடச்சுட

  

  திமுக கூட்டணியில் முஸ்லிம் லீக் கட்சிக்கு வேலூர் தொகுதி

  By dn  |   Published on : 06th March 2014 01:25 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  திமுக கூட்டணியில் முஸ்லிம் லீக் கட்சிக்கு வேலூர் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.

  இதற்கான உடன்பாட்டில் திமுக தலைவர் கருணாநிதியும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சித் தலைவர் காதர் மொகிதீனும் புதன்கிழமை கையெழுத்திட்டனர்.

  பின்னர் செய்தியாளர்களிடம் காதர் மொகிதீன் கூறியது:

  வேலூரில் திமுகவின் துணைப் பொதுச்செயலாளர் துரைமுருகனின் மகன் போட்டியிட விரும்பி, திமுக தலைமையிடம் மனுவும் கொடுக்கப்பட்டிருந்தது.

  எனினும், எங்களுக்காக துரைமுருகனும் திமுக தலைவர்களும் விட்டுக் கொடுத்துள்ளனர். அதற்கு அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.

  மனித நேய மக்கள் கட்சிக்கு மயிலாடுதுறை தொகுதியும், எங்களுக்கு வேலூர் தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளது.

  தமிழகத்தில் திமுக, அதிமுக தலைமையில் அமையும் கூட்டணியே பலமானதாக இருக்கும்.

  கூட்டணிக் கட்சிகளை எப்போதும் கண்ணியத்துடன் நடத்தும் கட்சி திமுகதான் என்றார் அவர்.

  மக்களவைத் தேர்தலில் 2 தொகுதிகளை ஒதுக்குமாறு முஸ்லிம் லீக் கட்சி திமுகவிடம் கேட்டிருந்தது. ஆனால் ஒரு தொகுதியே ஒதுக்கப்படும் என்று திமுக திட்டவட்டமாகக் கூறிவிட்டது. இதனை முஸ்லிம் லீக் கட்சியினர் ஏற்றுக்கொண்டனர்.

  பின்னர், தொகுதி பங்கீட்டின்போது வேலூர் தொகுதியை ஒதுக்குமாறு முஸ்லிம் லீக் கட்சி கேட்டது. ஆனால், திருநெல்வேலி தொகுதியே ஒதுக்கப்படும் என்று திமுக கூறியது. இதனை முஸ்லிம் லீக் கட்சியினர் ஏற்றுக்கொள்ளவில்லை.

  இதனால் திமுகவுக்கும், முஸ்லிம் லீக் கட்சிக்கு இடையே 2 நாள்களாக பேச்சுவார்த்தையில் இழுபறி இருந்தது வந்தது.

  தற்போது வேலூர் தொகுதி ஒதுக்கப்பட்டதன் மூலம் இரு கட்சிகளும் உடன்பாட்டுக்கு வந்துள்ளன.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai